பாகிஸ்தான் பயணத்திற்கு மறுத்த டிக்வெல, திசரவிற்கு ‘செக்’: கரீபியன் லீக்கில் ஆட முடியாது!

கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) விளையாடுவதற்கு நிரோஷன் டிக்வெல்லவுக்கு நோ-ஒப்ஜெக்ஷன் சான்றிதழ் (என்ஓசி) வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு டிக்வெல மறுப்பு தெரிவித்தமையாலேயே இலங்கை கிரிக்கெட் இந்த அதிரடி நடவடிக்கையெடுத்ததாக கருதப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா இதுபற்றி கூறும்போது, ஒரு வீரர் நியாயமான முறையில் தேர்வு செய்யப்படக்கூடிய ஒரு தேசிய சுற்றுப்பயணம் இருந்து, அந்த தொடரிலிருந்து வீரர் அல்லது வீராங்கணை விலகினால் வெளிநாட்டு லீக்கில் விளையாட என்ஓசி வழங்கப்படாது என்பது இலங்கை கிரிக்கெட்டின் கொள்கையாகும்“ என விளக்கமளித்துள்ளார்.

“தேசிய சுற்றுப்பயணம் இருக்கும்போது NOC வழங்கக்கூடாது என்பது எங்கள் கொள்கை, வீரர்கள் அதை அறிந்திருப்பார்கள்” என்று டி சில்வா கூறினார்.

இதேவேளை, தற்போது கரீபியன் பிரிமியர் லீக்கில் ஆடிவரும் திசர பெரேராவிற்கும் இலங்கை கிரிக்கெட் செக் வைத்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட என்ஓசி சான்றிதழ் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. அதனால் பிரீமியர் லீக்கில் எஞ்சியுள்ள பெரும்பாலான போட்டிகளில் ஆட முடியாது. அவர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.

“டிக்வெல்லவுக்கு ஒரு என்ஓசி வழங்கப்படவில்லை, அடுத்த சில வாரங்களில் தேசிய அணியுடன் பயிற்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 15 ஆம் திகதி திசரவை நாடு திரும்பும்படி நாங்கள் கேட்டுக் கொண்டோம். எனவே அவர் பயிற்சியிலும் அணியிலும் சேரலாம்.” என டி சில்வா கூறியுள்ளார்.

திசர பெரேராவிற்கு என்ஓசி வழங்கப்பட்டு, செயின்ட் லூசியா ஜூக்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். எவ்வாறாயினும், இலங்கை சுற்றுப்பயணங்களில் அவர் சேர்க்கப்பட்டால் உடனடியாக அணியில் இணைய வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் அந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. அவர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு செல்ல மறுத்துவிட்டாலும், இப்போது அவர் இலங்கைக்கு திரும்ப வேண்டும்.

டிக்வெல்ல, திசர பெரேரா இருவரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here