பாகிஸ்தான் செல்ல வீரர்கள் மறுத்ததால் இலங்கை கிரிக்கெட் அதிருப்தி!

பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ய பத்து இலங்கை வீரர்கள் திடீரென மறுப்பு தெரிவித்திருப்பது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.

நிரோசன் டிக்வெல, திசர பெரேரா, லசித் மலிங்க, திமுத் கருணாரட்ன, அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமல், சுரங்க லக்மல், குசல் ஜனித் பெரேரா, தனஞ்ஜெய டி சில்வா, அகில தனஞ்ஜய ஆகிய வீரர்களே பாகிஸ்தான் பயணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மறுத்திருப்பது எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கான தேர்வு வாய்ப்புகளை பாதிக்காது என்று தலைமை தேர்வாளர் அசாந்த டி மெல் வீரர்களிடம் கூறியிருந்தாலும், ஒரு முழு சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்க முடியாத விரக்தி இலக்கை கிரிக்கெட் சபையிடம் ஏற்பட்டுள்ளது.

“நாங்கள் மிகவும் உத்தமமான பாதுகாப்பு மதிப்பீட்டைச் செய்துள்ளோம், பாகிஸ்தான் அவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தகிறது. மற்ற சர்வதேச வீரர்களும், உலக லெவன் மற்றும் பல அணிகளும் அங்கு சுற்றுப்பயணம் செய்துள்ளனர். மேலும் பாகிஸ்தானும் ஜனாதிபதி பாதுகாப்பை வீரர்களுக்கு வழங்க தயாராக உள்ளனர். இன்னும் என்ன வேண்டும்?” என இலங்கை கிரிக்கெட் அதிகாரியொருவர் ஈஎஸ்பிஎன்னிடம் விரக்தியாக தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இலங்கை அணி பேருந்து மீதான லாகூர் தாக்குதல்தான் பாகிஸ்தானிற்கான சர்வதேச சுற்றுப்பயணங்களை நிறுத்தியது. இருப்பினும் தற்போதைய வீரர்களின் பட்டியலில் சுரங்க லக்மல் மட்டுமே அந்த தாக்குதலில் சிக்கியுள்ளார்.

“ஆனால் நாங்கள் எங்கள் ஆசிய அண்டை நாடுகளுக்கு உதவ வேண்டும். இந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட ஒரு அணியை இலங்கைக்கு அனுப்பியது. நாங்கள் யாருடைய உயிரையும் பணயம் வைக்க முயற்சிக்கவில்லை, ஆனால் எங்களுக்கு கடமைகள் உள்ளன, மேலும் பரிமாற்றம் தேவை. பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது.” என்றார்.

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி20 போட்டிகளைக் கொண்ட தொடர் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகள் கராச்சியிலும், பின்னர் லாகூரில் ரி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here