16 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்து குழந்தை பிரசவிக்க வைத்த நுண்கடன் நிறுவன முகாமையாளர் கைது!

16 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, களுவாங்கேணி பகுதியில் வசிக்கும் 16 வயதான குறித்த யுவதி கடந்த வருடம் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இயங்கிவரும் நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அந்த யுவதி குழந்தை பிரசவித்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைக்கு தந்தையார் நுண்கடன் நிறுவன முகாமையாளர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து நுண்கடன் நிதிநிறுவனத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here