‘2 வருடங்களின் முன் மரதன் ஓட்டத்தில் லிமினியை சந்தித்தேன்’: காதல் கதையை சொன்னார் நாமல்!

மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவும், லிமினி வீரசிங்கவும் வரும் 15ம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

இருவரும் சில காலமாக காதலித்து வந்த நிலையில், தற்போதுதான் அவர்களின் உறவு பகிரங்கமாகியிருந்தது.

தமது காதல் குறித்து நாமல் ஊடகமொன்றிடம் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

அதில், “லிமினியுடனான எனது காதல் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஒரு மரதன் ஓட்ட நிகழ்வின் மூலமே அறிமுகமானோம்.  ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பிறகு நாங்கள் ஆரம்பித்த உறவு பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தது.

அதன்படி, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, எங்கள் உறவைப் பற்றி இருவரும் பெற்றோருக்கு தெரியப்படுத்தினோம். என் பெற்றோரைப் போலவே, லெமினியின் பெற்றோரும் எங்கள் உறவை ஆசீர்வதிக்க தயாராக இருந்தனர். இது எங்கள் உறவுக்கு பெரும் ஊக்கமளித்தது.

அவர்களின் ஆசீர்வாதங்கள் இருந்தபோதிலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது எங்கள் உறவு குறித்து பலர் கவலை தெரிவித்தனர்.

யோஷிதவின் நிச்சயதார்த்தத்திற்கு லிமினி வந்திருந்தார். குடும்ப உறுப்பினராக நாங்கள் குழுவாக புகைப்படம் எடுத்தபோதே, நமது காதலை பலர் அறிந்தனர்” என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here