பிணையின்றி 15 இலட்சம் வரையான வங்கிக்கடன் பெறலாம்!

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அரச வங்கிகளில் பிணை இன்றி 15 இலட்சம் ரூபா வரையிலான கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கிழான கடன் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் சிறுதொழில் முயற்சியாளர்கள், இளைஞர்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனூடாக பயன் பெறுவது குறித்து பல்வேறு தரப்புக்களுடன் அமைச்சர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

நேற்று காலை போரினால் பாதிக்கப்பட்டு குடும்ப தலைவரை இழந்த விதவைகள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான சந்திப்பு நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதற்கு லேதிகமாக புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ள முன்னாள் எல்.ரி.ரி உறுப்பினர்களுடனும் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, திறைசேரியின் சிரேஷ்ட பிரதி செயலாளர் ஆர்.தேசப்பிரிய, திறைசேரியின் பிரதி செயலாளர் ஆர்.அத்தப்பத்து, யாழ் மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காணாமற்போனவர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளவதற்கு சான்றிதழ் அற்றோர் காணாமற் போனவர் தொடர்பான அலுவலகத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here