பிரபல இயக்குனர் ராஜசேகர் காலமானார்

பிரபல இயக்குனரும், நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று காலமானார்.

பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்த ராஜசேகர், இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் நடித்து பிரபலமானவர். பிறகு தனது நண்பரான ராபர்ட்டுடன் இணைந்து, பாலைவனச் சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய ராஜசேகர், பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (08) காலை உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here