காதலர் கழற்றி விட்ட பின் இலியானா வெளியிட்ட மெசேஜ்!

தெலுங்கு, தமிழில் ஆரம்பத்தில் நடித்து வந்த இலியானா, பின்னர் பாலிவுட்டில் பிசியாகிவிட்டார். அப்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ நிபோன் என்பவரை காதலித்து வந்தார். ஒருகட்டத்தில் அவர்கள் இருவரும் இரகசிய திருமணம் செய்து கொண்டதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகின.

இப்படியான நிலையில், 6 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வந்த இலியானா, தற்போது சிரஞ்சீவியுடன் புதிய படத்திலும் நடிக்க கமிட்டகியிருக்கிறார். இந்த நேரத்தில் இலியானா தனது காதலரை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

அதை உறுதிப்படுத்தும்வகையில், தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஆண்ட்ரூ நிபோனின் போட்டோக்களை டெலிட் செய்தார் இலியானா. அதையடுத்து இப்போது ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், வாழ்க்கையில் நீங்கள் குடும்பத்தினர் மற்றும் பார்ட்னரை இழக்கலாம். ஆனால் உங்களை மட்டும் இழந்து விடாதீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்கள் நேசிக்காதபோது உங்களை நீங்களே நேசித்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு பதிவிட்டுள்ளார்.

காதல் தோல்வியைத்தான் இப்படி கமண்ட் பண்ணி ஆற்றிக் கொள்கிறார் இலியானா என பேசிக் கொள்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here