ஐ.தே.க பாசத்தில் சொந்த கட்சி எம்.பியையே கவிழ்ப்பாரா சுமந்திரன்?

யாழ் மாநகரசபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடந்தபோது, தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள் சரவணபவன் மற்றும் சுமந்திரனிற்கிடையிலான “லடாய்“ பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தோம்.

பட்டதாரிகள் நியமனம் பெற்றவர்கள் நேற்றைய நிகழ்விற்கு  கட்டாயம் வர வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் தரப்பினால் கட்டளையிடப்பட்டிருந்தது. பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளே அதை அதிருப்தியுடன் குறிப்பிட்டிருந்தனர். இந்த அநியாயத்தை பொறுக்க முடியாமல் அவர்களே ஊடகங்களை தொடர்பு கொண்டும் தகவலை பரிமாறியிருந்தனர்.

நிகழ்விற்கு முதல்நாள்- நேற்று முன்தினம்- பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் தமிழ்பக்கத்திடம் இதை குறிப்பிட்டிருந்தனர். அந்த தகவலை உறுதிசெய்ய, பட்டதாரி நியமனம் பெற்றவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, வந்த தகவல் உண்மைதான் என்பது தெரிந்தது.

அப்படி யாராவது பட்டதாரிகள் உதயன் பத்திரிகைக்கும் தகவல் கொடுத்திருக்கலாம்.

நேற்று- நிகழ்வில் அன்று- உதயன் பத்திரிகையில் இது செய்தியாக பிரசுரமாகியிருந்தது.

நேற்று நிகழ்வில் சுமந்திரன் உரையாற்றும்போது, “இன்றைய நிகழ்வில் பட்டதாரிகளை அழைத்து ஆசனத்தை நிரப்பவுள்ளதாக உதயன் பத்திரிகையில் செய்தி பிரசுரித்து விட்டு துணிச்சலாக நிகழ்வில் கலந்து கொண்டுள்ள சரவணபவன் அவர்களே“ என விளித்திருந்தார் சுமந்திரன்.

அதை நேற்று காலையே செய்தியாக்கினோம். (தலைப்பை கூட மாற்றமாமல் வழக்கம் போல ஜேவிபி போன்ற இணையங்கள் திருடி பிரசுரித்திருந்தன)

இதில் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது.

உதயன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட விடயம் உண்மையான விடயம். பட்டதாரிகளை கட்டாயமாக ஐ.தே.க அழைத்திருந்தது. அதை உதயன் வெளியிட்டது.

சுமந்திரன் அதை மேடையில் குறிப்பிட்டது, “இனி எம்முடன் சேட்டை விட வேண்டாம்“ என்ற செய்தியை சரவணபவனிற்கு சொல்லவே சுமந்திரன் அதை மேடையில் சொன்னார்.

அதாவது- பட்டதாரிகளை கட்டாயமாக நிகழ்விற்கு அழைத்தது பிரச்சனையான விடயம் அல்ல, ஐ.தே.கவை பகிரங்கமாக விமர்சித்ததே சுமந்திரனிற்கு பிரச்சனையான விடயமாக மாறியுள்ளது. ஐ.தே.கவை உதயன் விமர்சித்தது என்பதற்காக, தமது கட்சிக்காரர் என்பதையும் பாராமல் மேடையில் சுமந்திரன் அப்படி பேசியிருக்கிறார்.

“மேடையில் சரா எம்.பியின் வேட்டியை உருவிய சுமந்திரன்“ என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். சம்பவம் நடந்ததும் அதை ஒப்புவித்திருந்தோம். கட்சி மோதல்களால், இந்த சம்பவத்தை அவரவர் அணி சார்ந்து, ஏதோ ஒரு உணர்வுடன் அணுகியிருப்பார்கள். ஆனால், இந்த கட்சி மோதல்களிற்கு அப்பால், சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ள ஐ.தே.க பாசம் அதிர்ச்சியளிக்க வைப்பது.

முந்தைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் இதேபோல, பட்டதாரிகளை அலைக்கழித்த போது, எல்லோரும் எதிர்த்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்த்தது. ஆனால், இப்பொழுது தனது உத்தியோகபூர்வமற்ற பங்காளி அதை செய்தபோது, அதை தட்டிக் கேட்காமல், அந்த சம்பவத்தை வெளிப்படுத்தியவரை “ஓவ்“ செய்யும் முயற்சியில் சுமந்திரன் ஈடுபட்டது, அவர் கூறும் ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குட்படுத்துகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here