கணவரின் அதீத செக்ஸ் ஆர்வத்தால் என் உடல் மாறுகிறது… என்ன செய்யலாம்?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

தி.ரவிக்குமார் (24)
யாழ்ப்பாணம்

நான் தற்போது யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் தங்கி, தனியார் துறையொன்றில் வேலை செய்து வருகிறேன். எனக்கு இப்போது உள்ள பிரச்சனை, இரவில் நித்திரையில் விந்து வெளியேறி வருகிறது. இதற்கு என்ன தீர்வு?

டாக்டர் ஞானப்பழம்: நீங்கள் மகிழ்ச்சியாக உணர வேண்டிய விசயம் ஒன்றிற்கு, தலையை போட்டு உடைத்து, இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். பானையில் இருப்பது, அகப்பையில் வருகிறது. அவ்வளவுதான்.

விந்து சுரப்பது இனப்பெருக்கத்துக்கு மட்டும்தான். உடல் ஆரோக்கியமாக இருந்து, விந்து சரியாகச் சுரந்துகொண்டே இருந்தால், குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. விந்து வெளியேறினால் உடல் ஆரோக்கியம் இழக்கும்; உடலில் சத்து குறைந்துவிடும்; உடல் எடை குறைந்துவிடும் என்று சொல்வதெல்லாம் பொய்யான தகவல்கள். இவற்றுக்கும் விந்து வெளியேறுவதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மூடநம்பிக்கை, அறியாமையால், போலி மருத்துவர்களின் விளம்பரங்கள், அவர்கள் சொல்லும் தவறான தகவல்களால் இளைஞர்கள் பயந்துவிடுகிறார்கள்.

தூக்கத்தில் விந்து வெளியேறுவதை ஆங்கிலத்தில் வெட் ட்ரீம் நைட் ஃபோல்’(Wet Dream Night Fall) என்று சொல்வார்கள். இது எல்லா ஆண்களுக்கும் நிகழும் ஒன்றுதான். பயப்பட வேண்டியதில்லை.

ஆண்கள் 13, 14 வயதில் பருவமடைவார்கள் (Puberty). அப்போது சுரக்கத் தொடங்கும் விந்து மரணம்வரை சுரக்கும். விந்து சுரக்காமல் போக மூன்று காரணங்கள் இருக்கின்றன. அவை பிறவிக் கோளாறு, நோயால் சுரக்காமல் போவது, பிறப்புறுப்பில் அடிபட்டு பாதிக்கப்படுவது.

விந்து சுரக்க, நம் உடலில் மூன்று உறுப்புகள் செயல்படுகின்றன, விதைப்பை (Testis), புராஸ்டேட் சுரப்பி (Prostate Gland), செமினல் வெசிகிள் (Seminal Vesicle). இவை மூன்றும் சரியாகச் செயல்பட்டால் விந்து சுரந்து கொண்டேயிருக்கும். ஆனால், உடலால் குறிப்பிட்ட அளவு விந்தணுக்களை மட்டுமே சேமிக்க முடியும். அந்த அளவைத் தாண்டினால், அது தானாகவே வெளியேறத்தான் செய்யும்.

பெரும்பாலானவர்கள் செக்ஸில் ஈடுபட்டோ, சுயஇன்பம் செய்தோ விந்தை வெளியேற்றி விடுகிறார்கள். இல்லையென்றால் தூக்கத்தில் விந்து தானாக வெளியேறிவிடும். இது பிரச்னையோ, நோயோ அல்ல. இயல்பான ஒன்று.

இப்போது ஆண்கள் பருவமடைந்தவுடன் திருமணம் செய்துகொள்வதில்லை. பாடசாலை, பல்கலைகழக கல்வி முடிந்து, வேலைக்குப் போய், வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னரே திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்போதிருக்கும் சமூகச் சூழலில் 25 வயதிலிருந்து 30 வயதுக்குள்தான் ஆண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதற்காக விந்து சுரக்காமல் இருக்குமா? அது, அதன் கடமையைச் செய்துகொண்டுதான் இருக்கும். பணம் இல்லையென்று, நமக்குப் பசி எடுக்காமல் இருக்குமா?

அதுதான் உங்களிற்கும் நடக்கிறது. புரிந்து நடவுங்கள்!

பெண்- பெயர் குறிப்பிடவில்லை (26)
வவுனியா

எனக்கு திருமணமாகி நான்கு மாதமாகிறது. தனியார்துறையில் வேலை பார்க்கிறேன். என் கணவர் செக்ஸில் அதீத ஈடுபடாக இருக்கிறார். அவருக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை. அதிகம் செக்ஸில் ஈடுபடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா? என் உடல் கட்டமைப்பும் மாறுவதாக உணர்கிறேன். அதிகசெக்ஸ் வைப்பதால் உடனடியாக ஏதும் கேடு வருமா?

டாக்டர் ஞானப்பழம்: நீங்கள் முற்கூட்டியே மனதிற்குள் ஒரு முடிவுடன் இருக்கிறீர்கள். அதிகம் செக்ஸ் வைப்பது உடலுக்கு தீங்கானது, கேடு விளைவிக்குமென நினைக்கிறீர்கள். அந்த நம்பிக்கையிலிருந்துதான் இந்த கேள்வி வந்திருக்கிறது.அப்படி பார்த்தால், இந்த உலகில் பெரும்பாலானவர்கள் உடல் கெட்டுப் போயிருப்பார்கள்!

நான் சொல்வது உங்களிற்கு புரியுமென நினைக்கிறேன்.

தமிழ் பண்பாட்டில் செக்ஸ் குறித்த பார்வை ஏற்படுத்தியுள்ள மனநிலை, செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நெருக்கடிகளை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். முதலில், இந்த மனத்தடையை களையுங்கள். செக்ஸ் அதிகமாக வைப்பதால் எந்த கேடும் இல்லை.

“அளவிற்கு அதிகம்“ என நீங்கள் எந்த எண்ணிக்கையை கருதுகிறீர்கள் என குறிப்பிடவில்லை. ஆனால், உடல் ஒத்துழைக்கும் அளவில் செக்ஸ் வைத்துக் கொள்வதில் எந்த தவறுமில்லை.

செக்ஸ் வைத்துக் கொள்வதால், கெடுதல் என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், புள்ளிவிபரங்கள் சொல்வது என்ன தெரியுமா?

வாரத்துக்கு மூன்று முறை அல்லது அதற்கும் அதிகமாக செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைகின்றன.

செக்ஸின்போது உற்பத்தியாகும் புரோலொக்டின் ஹார்மோன், முன் மூளையில், ஸ்டெம் செல்கள் மூலம் புதிய நரம்புகள் உற்பத்தியாகத் தூண்டுகின்றன.

ஒரு முறை செக்ஸ் வைத்துகொள்வதால் 200 கலோரிகள் உடலில் எரிக்கப்படுகின்றன. இது 15 நிமிடங்கள் ஓடுவதற்குச் சமம்.

தூக்கமின்மையைத் தவிர்ப்பதிலும் செக்ஸுக்கு முக்கியப் பங்குண்டு. திருப்தியான உடலுறவில் ஈடுபட்ட பிறகு நல்ல உறக்கம் நிச்சயம்.

தொடர்ச்சியாக ஆரோக்கியமான செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு ஹார்மோன் (Dehydroepiandrosterone) குறைபாட்டால் உண்டாகும் முடி வளர்ச்சி, பார்வை தொடர்பான குறைபாடுகள் ஏற்படாது.

முழுமையான செக்ஸ், பெண்களின் கர்ப்பப்பையை பலப்படுத்தும். ஆண்களின் தசை மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.

செக்ஸ் வைப்பதால் உடல் கட்டழகு கெடுகிறது என நீங்கள் நினைத்தால், அதற்கு நிறைய உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை செய்தால் உடலழகை பேண முடியும். கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை… உடற்பயிற்சி செய்யவும் பஞ்சி என்றால், என்ன செய்வது?

முந்தைய பாகத்தை படிக்க டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 12

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here