
புதன், ராகு, சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். எதிர்கால தேவைகளுக்காக திட்டமிடுவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.
தாய்வழி உறவினர் ஓரளவு உதவுவர். அறிமுகமில்லாதவருக்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் அறிவு, செயல் திறனில் மேம்படுவர். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். இளமை கால இனிய நினைவுகளை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். மனைவியின் செயலில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணசேமிப்பு கூடும். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
சுக்கிரன், புதன், குரு, சந்திரன் நற்பலன் வழங்குவர். பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சமூக நிகழ்வு இனிய படிப்பினையை தரும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் கேட்டு பிடிவாதம் செய்வர். விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி குடும்ப நலன் மேம்பட உதவிகரமாக இருப்பார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்காக சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் பின்பற்றவும். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 7.9.19 காலை 10:49 மணி முதல் நாள் முழுவதும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
செவ்வாய், சுக்கிரன், சூரியன் தாராள நற்பலன் தருவர். உங்கள் நல்ல குணத்தை நண்பர் பாராட்டுவார். பேச்சு, செயலில் நிதானம் நிறைந்திருக்கும்.
குடும்பத்தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும். புத்திரரின் நற்செயல் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும். மனைவி உறவினர்களை உபசரித்து நற்பெயர் பெறுவார். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியும் பணவரவும் உண்டு. பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பணம் சேமிக்கவும் அனுகூலமுண்டு. பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.
சுக்கிரன், குரு, சனீஸ்வரர், கேது ராஜயோக பலன் வழங்குவர். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும்.
நற்செயல்களுக்கான பலன் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க நல்யோகமுண்டு. புத்திரர் பெற்றோரின் சொல்லை ஏற்று செயல்படுவர். இஷ்டதெய்வ அருள்பலம் துணை நிற்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் அன்பான ஆலோசனையை ஏற்று கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து பணி புரிவர். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு வெற்றிக்கு வழி தரும்.
ராகு, சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டாகும். மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். உடன்பிறந்தவர் அன்பு, பாசத்துடன் உதவுவர்.
வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் பெற்றோர் வார்த்தையை தயக்கமுடன் ஏற்று கொள்வர். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். எதிரியால் உருவான தொல்லையை சமயோசிதமாக சரி செய்யுங்கள். மனைவி குடும்ப நலன் பேணி காத்திடுவார். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். வெளியூர் பயணம் புதியவர்களை நண்பராக பெற்று தரும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
சுக்கிரன், சந்திரனால் சில நன்மை வந்து சேரும். மனதில் சில குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை உரிய வழிகாட்டுதல் தரும்.
வாகன பராமரிப்பினால் பயணம் எளிதாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் உறவினர் குடும்ப விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற அதிக பயிற்சி உதவும்.
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு வெற்றியை தரும்.
பெரும்பான்மை கிரகங்களால் அளப்பரிய நன்மை ஏற்படும். நண்பர் மற்றும் உறவினர் உதவுவர்.
மனதில் தைரியம் வளரும். தாமதமான பணிகளை புதிய உத்தியால் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். வாழ்வியல் நடைமுறை திருப்திகரமாகும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரர் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
சூரியன், புதன், சுக்கிரன் சிறப்பான பலன் தருவர். சமூக நிகழ்வுகளை தெளிந்த மனதுடன் அணுகுவீர்கள்.
உங்கள் மீதான மற்றவரின் பார்வை மதிப்பு மிகுந்ததாக இருக்கும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். புத்திரர் நற்செயல்களால் பெற்றோருக்கு பெருமை தேடி தருவர். பூர்வ சொத்தில் ஓரளவு பணவரவு பெறுவீர்கள். மருத்துவ சிகிச்சையால் நோய் தொந்தரவு குறையும். மனைவி உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவார். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். தொழில், வியாபார அபிவிருத்திக்கு அரசு உதவி கிடைக்கும். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.
சுக்கிரன், சந்திரன் ஓரளவு நற்பலன் தருவர். புதிய திட்டம் செயல்படுத்துவீர்கள். அன்புக்கு உரியவரின் உதவி ஊக்கம் தரும்.
பணப்பரிவர்த்தனை சீராகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவர். பூர்வ சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்தவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவில் தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர். மாணவர்களுக்கு ஆசிரியரின் வழிகாட்டுதல் ஊக்கம் தரும்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
குரு, ராகு, புதன், சுக்கிரன், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். செயல்களில் உற்சாகம் பரிமளிக்கும்.
அன்புக்குரியவர் பாராட்டுவர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். விவகாரங்களில் சுமூக தீர்வு கிடைக்கும். வெளியூர் பயணம் எதிர்ப்புகளை பூர்த்தி செய்யும். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும். மனைவி வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து பணம் சேமிப்பாகும். பணியாளர் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.
கேது, புதன், சுக்கிரன், சனீஸ்வரரால் நற்பலன் அதிகரிக்கும். சமூக நிகழ்வின் போக்கு உணர்ந்து பழகுபவர்களிடம் பேசுவீர்கள்.
வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரர் உங்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். பகைவர் மனதிலும் உங்கள் மீதான நல்ல மதிப்பீடு உருவாகும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் தியாகம் நிறைந்த மனதை புரிந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி வந்து சேரும். மாணவர்கள் நன்றாக படித்து பரிசு, பாராட்டு பெறுவர்.
பரிகாரம்: வீரபத்திரர் வழிபாடு வெற்றியளிக்கும்.
சூரியன், செவ்வாய், குரு அளப்பரிய நன்மை வழங்குவர். இடம், சூழ்நிலை உணர்ந்து பேச வேண்டும். குடும்பத்தினரின் தேவையை சிக்கன பண செலவில் நிறைவேற்றுவீர்கள்.
வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். புத்திரர் ஆன்மிக அறிவாற்றலில் சிறந்து விளங்குவர். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் செழித்து பண சேமிப்பு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணி புரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வர்.
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கையை வளர்க்கும்.
