ஸாரி ஷெரின்…இந்த நிமிஷத்துல இருந்து நான் தர்ஷன் லைஃப்ல இல்ல: தர்ஷன் காதலியின் கண்ணீர் வீடியோ!

பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் – ஷெரின் விவகாரம் பூதாகரமான நிலையில் தர்ஷனின் காதலி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது வீட்டுக்குள் 8 பேர் மட்டுமே உள்ள நிலையில் புதிதாகச் சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் வந்துள்ளனர். ஒருபுறம் லாஸ்லியா காதல் சென்றுகொண்டிருந்த நிலையில் வனிதா ஷெரின் – தர்ஷன் நட்பை அஃபேர் என்று கொச்சைப்படுத்தக் கடுப்பான ஷெரின் வனிதாவிடம் மல்லுக்கட்டினார்.

இதுவொரு புறமிருக்க, தர்ஷன் காதலி சனம் ஷெட்டியிடம், பிக்பாஸில் மற்றவர்கள் தர்ஷனை டார்கெட் செய்ய காரணம் நீ அவனை பற்றி அளித்த பேட்டிகள் தான் என்று என தர்ஷனுக்கு நெருக்கமான ஒருவர் கூறினாராம். இதனால் மனமுடைந்த சனம் ஷெட்டி கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

I deleted my videos since i dont want anything to affect Tharshan's name outside. But even after i deleted the videos u all cant stop ur critisicm right? Now ur all inboxing me?? Have the guts to comment here let me see .. My life n emotions r a joke to u all? This is my sincere request to u all one last time🙏🙏🙏 stop blaming me for spoiling Tharshan image. I have not spoken bad abt him anywhere and I dont doubt him. Im not angry with him. I have not spoken bad abt Sherin anywhere as well. Let them both do what they want. Its my decission to move away from his life and from all this baggage for my own reasons🙏 I have a nervous breakdown today because of all the negative hatred towards me for no mistake of mine. I dont hv the energy to fight anymore🙏 im tired of blocking n deleting.

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

அதில், எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல. நான் எப்பவுமே தர்ஷனுக்கு ஒரு சப்போர்ட் சிஸ்டமாக தான் இருக்கனும்ன்னு நெனைச்சிருக்கேன். இன்னைக்கு என்னால தான் அவங்களுக்கு வின் பண்ணுற சான்ஸ் போய்ட்டு இருக்குன்னு சொன்னா நான் விலகிடுறேன். அவங்க மேல நான் என் உயிரையே வச்சிருக்கேன். இருந்தாலும் என்னால அவருக்கு கெட்டபேரு வேணாம். என்னால அவங்க உள்ள பாதிக்கப்படுறாங்கன்னா ‘ஸாரி தர்ஷன், ஸாரி ஷெரின்’, இனிமே நான் தர்ஷன் பத்தி எந்த இன்டர்வியூலையும் பேச மாட்டேன். இந்த நிமிஷத்துல இருந்து நான் தர்ஷன் லைஃப்ல இல்ல. நான் சாகுற வரைக்கும் தர்ஷனை லவ் பண்ணுவேன்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here