நீச்சலுடையில் ரசிகர்களை சூடேற்றும் ஷெரின்

நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை ஷெரின். படம் சரியாக போனாலும் ஷெரின் சரியாக விலை போகவில்லை.

ஆரம்ப காலத்தில் அவ்வப்போது கிடைக்கும் விளம்பர படங்களில் எல்லாம் நடித்து வந்தவர், பின் விசில், ஜெயா, உற்சாகம் என மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இருந்தும் அவருக்கு தமிழில் முன்னணி நடிகை ஆக வேண்டும் என்ற கனவு எட்டாக்கனியாகவே இருந்தது.

இதனால் வெளிமாநிலங்களுக்கு சென்று மற்ற மொழிகளில் நடித்து உச்சத்தை அடையலாம் என்று நினைத்தவருக்கு அதுவும் கைகொடுக்கவில்லை. இதனால் மீண்டும் தமிழ்நாட்டிலேயே வந்து செட்டில் ஆகிவிட்டார்.

இதற்கிடையில் செரின் தனது உடல் எடையில் கவனம் செலுத்தாமல் விட்டதால் குண்டான தோற்றத்துக்கு மாறினார். பின்னர் ஆயுர்வேத முறையில் உடம்பை குறைத்து இளம்பெண்ணை போல தற்போது காட்சியளிக்கிறார்.

இதுவரை தமிழ்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ”நண்பேன்டா” படத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

33 வயதான ஷெரின், பீச்சில் டூ பீஸில் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட இளைஞர்கள் சொக்கிப்போய் லைக்குகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here