மேடையில் வைத்து சரா எம்.பியின் வேட்டியை உருவி விட்ட சுமந்திரன்!

யாழ் மாநகரசபையின் நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மேடையில் வைத்தே சரவணபவன் எம்.பியின் வேட்டியை கழற்றிவிடுவதை போன்ற சம்பவம் ஒன்று இன்று நடந்தது.

நிகழ்வில் ஈ.சவரணபவன் எம்.பியும் கலந்து கொண்டிருந்தார்.

எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றியபோது, பிரமுகர்களை வரிசையாக விளித்தார். சரவணபவனை விளிக்கும் போது,

‘இந்த நிகழ்ச்சியில் 2000 பட்டதாரிகளை கட்டாயமாக கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருப்பதாக இன்றைய அவரது பத்திரிகையில் முன்பக்கத்தில் செய்தி பிரசுரித்து விட்டு, துணிவாக இந்த மேடையில் வந்திருக்கும் சரவணபவன் அவர்களே’ என விளித்தார்.

இதை கேட்டதும், கூட்டத்திலிருந்தவர்கள் கைதட்டி, பெரிதாக சிரித்ததுடன், சிலர் விசிலடித்தனர்.

சரா எம்.பி, முகத்தில் ரியாக்சன் காட்டாமல் பேசாமல் இருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here