ஒரு பூனையால் யாழ்ப்பாண ரீச்சருக்கு ஏற்பட்ட நிலைமை!

யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் உடுவில் அரச கால்நடை வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட பூனையொன்று நேற்று, தப்பியோடி விட்டது.

முதல் வரி செய்தியை படித்துவிட்டு, “யாரடா இவன் அட்மின். அடித்துக் கொல்லுங்கள்“ என நீங்கள் எகிறுவது புரிகிறது. பூனை தப்பியோடியது செய்தியில்லை. அதற்கு பின்னால் ஒரு சென்டிமென்டான கதையுள்ளது. அதை படியுங்கள்.

உடுவில் கால்நடை வைத்திய நிலையத்திற்கு நேற்று காலை, முச்சக்கர வண்டியில் ஒரு பெண்மணி வந்தார். நீலநிற கூடையொன்றுக்குள் பூனையொன்றை அடைத்து, பாதுகாப்பான முறையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தார்.

கால்நடை வைத்தியர் பரிசோதிக்கும் மேசையில் பூனையை உட்கார வைப்பதற்காக, கூடையிலிருந்து எடுத்தபோது, அவருக்கு டிமிக்கி காட்டிவிட்டு பூனை தப்பியோடி விட்டது.

பூனை ஓட, அந்த பெண்மணி ஓட, அதன்பின்னால் இன்னும் சிலர் ஓட அந்த பகுதி சிறிதுநேரம் பரபரப்பானது. வைத்தியசாலை வளாகத்திற்குள் தேடியும் பூனையை கண்டுபிடிக்க முடியாத நிலையில், வளாகத்திற்கு வெளியிலும் தேடினார்கள். பூனை அகப்படவேயில்லை.

பூனையை சிகிச்சைக்காக கொண்டு வந்த பெண், மிகத்துயரத்துடன் கால்நடை வைத்தியசாலையில் உட்கார்ந்து விட்டார். தன்னால் பூனை இல்லாமல் வீட்டுக்கு செல்ல முடியாது என கூறிவிட்டார். அவரது பிடிவாதத்தின் பின்னால் ஒரு சென்டிமென்டான கதையிருந்தது.

உடுவில் மகளிர் கல்லூரில் ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியை கடந்த ஒரு வருடமாக, செல்லமாக வளர்த்து வரும் பூனை அது. ஆசிரியை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரும் பூனையும், நாயும் மட்டுமே வீட்டில்.

ஆசிரியையின் ஓய்வூதியப்பணத்தில் கணிசமான பகுதியை செல்லப்பிராணிகளிற்கே செலவிட்டு விடுகிறார்.

கடந்த ஓரிரு தினங்களாக அந்த பூனைக்கு உடல்நலமில்லாமலிருந்தது. சாப்பிடவுமில்லை.

இதனால் ஆசிரியையும் துயரத்தில் சாப்பிடாமலிருந்துள்ளார். இதையடுத்து, ஆசிரியையின் நெருங்கிய உறவினரான பெண்மணியொருவர், நேற்று முன்தினம் வாடகை முச்சக்கரவண்டியொன்றில், பூனையை கூடைக்குள் அடைத்து சிகிச்சைக்காக அழைத்து வந்தபோதே பூனை தப்பியோடியுள்ளது.

இதையடுத்து நீண்டநேரமாக கால்நடை வைத்தியநிலையத்தில் உட்கார்ந்திருந்த பெண், துயரத்துடன் வீடு திரும்பினார்.

மாலையில் அந்த பகுதிக்கு வந்த குறித்த ஆசிரியை, பூனை குறித்த தகவல் கிடைத்தால் தனக்கு அறிவிக்குமாறு கால்நடை வைத்திய நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here