உடல்வாகு சிக்கென தெரிய டிப்ஸ்!

சிலருக்கு என்ன டிரஸ் போட்டாலும் சற்று பருமனாகவே தெரிவார்கள். உடல் வடிவமைப்பு சரியாக வெளிப்படாது. அதனாலேயே பிளஸ் சைஸ் ஆட்கள் தங்களுக்கு பிடித்தமான உடைகளை அணிய முடியாமல் இருக்கும். அவர்களுக்காகவே சில டிப்ஸ் தருகிறோம். அதை பின்பற்றினால், மனதுக்குப் பிடித்தமான உடையையும் அணியலாம். அதேசமயம் பருமனாகவும் தெரியாமல் இருக்கும்.

ஆடை விஷயத்தில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது கலர் தான். நம்முடைய நிறம் மற்றும் உடல்வாகுக்கு ஏற்றவாறு ஆடையின் நிறத்தை தேர்ந்தெடுத்து விட்டாலே போதும். நம்முடைய முழு அழகும் அதற்குள் அடங்கிவிடும்.

அடர்ந்த நிறங்கள் கொண்ட ஆடைகள் எப்போதும் உடலை சற்று மெல்லியதாகவே காட்டும். உடல் வாகை வெளிக்காட்டும். அதனால் எப்போதும் டார்க் கலர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

அதேபோல் பெண்களுக்கு மார்பகம் முதல் இடுப்பு வரை கச்சிதமான உடலோடு சேர்ந்திருக்குமாறு ஆடையின் ஃபேப்ரிக் இருப்பது அவசியம். டார்க் கலர் ஆடைகள் பெரும்பாலும் இடுப்பு மற்றும் மார்புப் பகுதியை சிக்கெனக் காட்டும்.

அடர்ந்த பெரிய பெரிய டிசைன்கள் கொண்ட அவுட்லுக் டிரஸ்களை அணியலாம். பெல்ட்டுடன் கூடிய கோட் மற்றும் ஆடைகளை அணியலாம். மார்பகங்களை எடுப்பாகக் காட்டும்படியான வீ- நெக் டொப்ஸ்களை அணிந்தால் உடல் சிக்கெனக் காட்டும். ஷோர்ட் டொப் அணிந்து ஷர்க் அல்லது ஓப்பன் ஜாக்கெட் அணிந்தால் பார்ப்பதற்கு லுக்காகவும் மொடனாகவும் இருக்கும். உடல்பருமனாக இருந்தாலும் வெளியே தெரியாது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here