ஃபிஷ்டெயில் பின்னல் கொண்டை

ஃபிஷ்டெயில் பின்னலின் ஸ்பெஷாலிட்டி, அது எப்போதுமே அவுட் ஒஃப் ஃபஷன் ஆகாது என்பது தான். இரண்டு எளிய ஸ்டைல்களை கலந்து ஒரு அட்டகாசமான தோற்றத்தை பெறுவது எப்படி என்று சொல்கிறோம்.

எப்படி செய்வது?

1. புளோ டிரை செய்து, எஸ் வடிவ பஃபை கூந்தலின் உச்சியில் உருவாக்கவும்.
2. இந்த பஃபை தலையின் மையத்துக்கும், பின் பகுதிக்கும் கொண்டு சென்று பின்கள் மூலம் பிணைக்கவும். நழுவாமல் இருக்க, ஸ்டைலிங் ஸ்பிரேவை தெளிக்கலாம்.
3. இந்த பின்னலுக்கு, கூந்தலின் கீழ் பகுதியை இரண்டு பிரிவுகளாக பிரித்துவிட்டு, அதன் இடது பகுதியின் வெளிப்புறத் திலிருந்து ஒரு மெல்லிய கூந்தல் கற்றையை இடது பகுதிக்கு மேலே இழுத்து, வலது பிரிவின் கீழ் இறுக்கவும்.
4. இதே போல, எதிர் பகுதியிலும் செய்து, கூந்தலின் முனை வரை மாற்றி மாற்றி செய்யவும்.
5. கூந்தலின் இறுதி வரை பின்னலை பின்னவும்.
6. அப்படியேவும் விடலாம். அல்லது, இதை ஒரு கொண்டையாக பின் செய்துகொள்ளலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here