எட்டு விதமான கொண்டை

மயில் கொண்டை

முதலில் முன் பகுதியை சரி செய்யவும். பிறகு முடி எடுத்து போனி டைல்ஸ் போடவும். பிறகு சுற்றிலும் சுருள் மற்றும் நடுவில் ஒரு சுருள் போடவும் பிறகு மீதமுள்ள முடியில் சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சம் வைத்து பின்னவும். பிறகு மயில் வடிவத்தை அதில் இணைக்க வேண்டும்.

கதம்ப கொண்டை

நேர் வகிடு எடுத்து முன் பகுதியை சரி செய்து உச்சியில் முடி எடுத்து பில்லை செட் செய்யவும் பில்லை சுற்றி கதம்ப மலர் சுற்றி வைத்து கதம்ப இணைப்பை வைக்கவும்.

மல்லிகை மற்றும் கோழிகொண்டை

முகத்திற்கு தக்கபடி வகிடு எடுக்கவும். பிறகு தேவையான நீளத்திற்கு பின்னல் போட்டு தேவையான நிறத்தில் குஞ்சலம் வைத்து கொள்ளவும். அதன் பின்னர் மல்லிகை மற்றும் கோழி கொண்டை பூவை வைத்து அடுக்கு அடுக்காக அலங்கரிக்கவும்.

முகூர்த்தகொண்டை

தேவையானபடி வகிடு எடுத்து உச்சிபில்லை வைத்து பின்னல் போட்டு தங்க நிறம் குஞ்சலம் அல்லது குண்டு குஞ்சலம் வைக்கவும். பின்னர் சடை அலங்காரத்தை கூந்தலில் வைத்து கட்டி விடவும் பின்னர் ரோஸ் வைத்து நடு நடுவே அலங்கரிக்கவும்.

ரிசப்சன் கொண்டை

முதலில் முன்பகுதியில் ”பப்” வைக்கவும். பிறகு ஓவர் டேப் சுருள் போடவும். அதன் பின்னர் மீதியுள்ள முடியை இழுத்து வைத்து பின்னல் இட்டு குஞ்சலம் வைக்கவும். அதன் பின்னர் நகை இணைப்பை உச்சியில் வைக்கவும். அதன் பிறகு கோழி கொண்டை மற்றும் மல்லிகை வைத்து அலங்கரிக்கவும்.

பஷன் கொண்டை

முதலில் முகத்திற்கு ஏற்ப வைத்து கொண்டு அதன் பிறகு உச்சிபில்லை (ராக்கொடி) வைத்து சவுரி வைத்து சடை பின்னி பிறகு குஞ்சலம் வைக்கவும். அதன் பிறகு உச்சியில் கோழி கொண்டை வைத்து அலங்கரிக்கவும். பின்னர் சடையில் நகை வைத்து அதன் மேல் கோழி கொண்டை சம்பங்கியை வைத்து அலங்கரிக்கவும்.

சிம்பிள் முகூர்த்த கொண்டை

முதலில் வகிடு எடுத்து பில்லை இணைக்கவும். பின்னர் சவுரி வைத்து குஞ்சலம் வைத்து அதன் பின்னர் மல்லிகைப் பூவை பில்லையில் சுற்றி அதன் சடை மேல் சுற்றி விடவும். பிறகு சடை நடுவில் பென்டன்டை வைத்து அலங்கரிக்கவும்.

முஸ்லிம் மணப்பெண் கொண்டை

முதலில் முகத்திற்கேற்ப முன் பகுதியை சரி செய்யவும். பிறகு சவுரி வைத்து சடை பின்னி குஞ்சலம் வைத்து அதன் பிறகு ‘கோல்டன் பீட்ஸ்’ வைத்து அலங்கரிக்கவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here