ஜாதகப்படி காதல் திருமணம் யாருக்கு நிறைவேறும்?

இந்த பிரபஞ்சத்தில் பாதிக்கும் மேற்பட்ட திருமணம் என்பது காதல் திருமணமாக அமையப்பற்றுள்ளது. இதில் பலபேர் பெற்றோர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி திருமணம் செய்கின்றர். சில பேர் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடைபெறுகிறது.

ஜாதகத்தில் காதல் என்பது முக்கிய கட்டம் கற்பனையில் செல்லும் காதல் உணர்வைத் தூண்டுவது 5 பாவம், காதல் திருமணம் பாக்கியம் கைகூட 7, 9 லக்கினத்தோடு தொடர்புகொள்ள வேண்டும். காதல் திருமண நீண்ட வெற்றி பெற ஜாதகத்தில் நிறைய சூட்சம விதிகள் உண்டு. அவை 1, 2, 7, 11, உடன் 5 பாவம் தொடர்பு பெற்றால் அல்லது ஆணின் களத்திரகாரகன் என்பவன் சுக்கிரன் மற்றும் பெண்ணின் ஜாதகத்தில் களத்திரகாரகன் செவ்வாய் இவர்கள் தங்கள் வீடுகளைப் பரிவர்த்தனை செய்திருந்தால் காதல் திருமணம் வெற்றிகரமாக நடைபெறும்.

காதலில் ஈடுபாடு ஏற்படுத்தும் கிரகம் யார் என்று பார்ப்போம். காதலின் மீது நாட்டம் ஏற்படுவதற்கு மனோகாரகன் சந்திரனே முழு காரணம் அதிலும் சந்திரன் அதிபலத்தோடு இருந்தால் தெளிவாகத் தீர்மானித்து காதல் என்றதையும் தாண்டி திருமண வாழ்வில் வெற்றியும் பெற்றுவிடுவார்கள். இதுவே தேய்பிறை சந்திரனோடு பாவிகள் தொடர்பு பெற்றால் நல்லவர்களா தீயவர்களா என்று தீர்மானிக்கத் தெரியா வண்ணம் மனது சலனப்படம் அதே வேகத்தில் தவறாக முடிவு எடுக்க வைக்கும். சிலர் தவறான காதல் வலையில் சிக்கிவிடுவார்கள். ஜாதகத்தில் காமகாரகன் என்றவுடனேயே சுக்கிரன் முதலில் வந்துவிடுவார் அவரே களத்திரகாரகன் அவரோடு சேர்ந்த கிரகம் பாவிகளின் பார்வை பெற்று மற்றும் சேர்க்கைப் பெற்றால் காதலில் விழ செய்யும். செவ்வாய் சுக்கிரனோடு வயப்படும் போது வேறு மாதிரி காதல் வாழ்க்கை நகர்த்திச் செல்லும்.

செவ்வாய் என்பவர் பெண்களுக்கு களத்திர காரகன் மற்றும் மாங்கல்ய காரகன் இவர் சனியோடு தொடர்பு பெற்றால் காதலின் தீவிரத்தைக் கொண்டு பெற்றோரின் மனதை உடைத்து, புண்படவைத்து சமுதாய கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்துகொள்வார்கள். சனியானவர் முடிந்தவரை சமுதாய கௌரவம், அந்தஸ்து என்று பார்க்காமல் தரமற்ற வேலை செய்ய வைப்பார். இதுவே காதல் திருமணம் செய்துகொள்ளும் குடும்பத்தின் கர்ம வினையை சனியானவர் செய்துமுடிப்பார்.

காதல் என்ற சந்தோஷம் ஒருசிலருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் சிலருக்கு அந்த சந்தோஷம் நிரந்தரமாக நீடிக்கவில்லை. இருபாலாரும் காதல் என்ற கோட்டையைத் தாண்டி, திருமணம் என்ற பந்தம் முடிந்து, அதற்கு பிறகு எதாவது காரணத்தில் ஏற்படும் பிரிவு சேர்க்கமுடியாமல் போகும். காதல் திருமணத்தில் சிலரால் சுகமாக நீடித்து வாழமுடியாமல் தவிக்கிறார்கள்.

ஜாதக ரீதியாக காரணிகள் பார்ப்போம்..

காதல் என்று சொல்லும் ஐந்தாம் பாவம் அவற்றோடு பாவிகள் தொடர்பு ஏற்பட்டால் மற்றும் அட்டமாதிபதி சேர்ந்து அல்லது பார்வை பெற்றாலும் காதல் திருமணம் கைகூடாமல் இருக்கும். ஜாதகத்தில் 7, 9 லக்கினத்தோடு பாவிகள் தொடர்பு பெற்றால் திருமணம் பிரச்னையில் தான் முடிவுபெறும். ஜாதகத்தை கொண்டு குடும்ப பந்தம் என்பது சந்தோஷமாக இருக்குமா அல்லது சந்தோஷம் குறைவாக இருக்குமா என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்லமுடியும்

சூரியன் செவ்வாய் சேர்க்கை ஒரு கொடுமை என்றால் அதுவும் ஏழாம் பாவத்தோடு தொடர்பு பெற்றால், பாகை அருகாமையில் இருந்தால் தம்பதியரை ஒன்றாக இருக்க விடாது. களத்திர அதிபதியோடு ஐந்தாம் அதிபதி அஸ்தமனம் கிரக யுத்தம் பெற்றபோது காதலின் பிரிவு ஏற்படும் கணவன் மனைவி குடும்ப பாவத்தோடு அதாவது 2, 8ல் பாவகிரகங்கள் இருப்பது சேர்ந்து வாழ விருப்பம் ஏற்படாது. அதிலும் 2, 8ல் சுபரும் அசுபரும் சேர்ந்து குறைந்த பாகையில் இருந்து அதன் தசா புத்திகள் இருவரில் ஒருவருக்கு ஏற்பட்டால் ஆயுள் என்ற கோட்டையை தட்டிவிட்டுச் செல்லும்.

ஜாதகருக்கு சஷ்டாஷக தோஷம் இருக்கக்கூடாது அதாவது மணப்பெண்ணின் ராசிக்கும் மணமகனின் ராசிக்கும் 6,8 அமையக்கூடாது. எடுத்துக்காட்டாக ரிஷப ராசி பெண் என்று வைத்துக்கொண்டால், ஆணின் ராசி தனுசு என்றால் இவர்களுக்கு சஷ்டாஷ்டக தோஷம் ஏற்படுகிறது. அதாவது ரிஷபத்திற்கு தனுசு எட்டாகவும் தனுசிற்கு ரிஷபம் ஆறாகவும் அமைவது பிரிவை ஏற்படுத்தும். ஜாதகத்தில் 5, 7 சரியாக இருந்து, சந்திர லக்னத்துக்கு மூன்றில் கேது இருந்தால் திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் கஷ்டமான நிலையை ஜாதகர் சந்திக்க நேரிடும்.

சூரியன் மற்றும் சுக்கிரன் பரிவர்த்தனை பெரும் பொழுது, அதில் ஒரு கிரகம் நீச்சம் பெற்றால், பெண்கள் தொடர்பால் அல்லது பெண்கள் சாபத்தில் பிரிவினை நிகழும் ஒரு சிலருக்கு 5-ல் சுபக்கிரக சேர்க்கை இருந்தால் காதலில் வெற்றி பெறுவார்கள். சூட்சம விதிப்படி அதுவே சூரியனும் சுக்கிரனும் 40 பாகையில் விலகி இருந்தாலோ அல்லது கேந்திரங்களில் சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து நிற்கப் பிறந்தவர்கள், காதலில் தோல்வி அடைந்து, தனது பெற்றோர்கள் விருப்பப்படியே திருமணம் செய்து கொள்வார்கள்.

சுக்கிர தசையோ ராகு தசையோ இளம் வயதில் ஏற்பட்டால் தன்னை அழகுபடுத்திக்கொள்வதும், தன் கற்பனையில் இரட்டிப்பாகச் செல்ல வைப்பதும், இளம் வயதிலே திருமணப் பந்தத்தில் செல்ல வீட்டைவிட்டுச் செல்ல என்று தவறான முடிவுகளை எடுக்கவைக்கும்.

இவை அனைத்தும் சிறு தொகுப்பு பொது பலன். ஜாதகத்தில் உள்ள சாரம், பார்வை, சேர்க்கை பார்த்துச் சரியாக கூறமுடியும். கடைசியாக சொல்லவிரும்புவது என்னவென்றால் காதலிப்பது தவறு அல்ல; அதுவே பெற்றோர் மனதையும் உடலையும் புண்படுத்தி திருமணம் செய்துகொள்வது என்பது நீண்ட மகிழ்ச்சியைத் தொடாது. காதலித்து திருமணம் செய்ய முற்படுவார்கள் முடிந்தவரைப் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமண வாழ்வைத் தொடங்க முயற்சிக்க வேண்டும். மதியோடு செயல்பட்டாலும் சில ஜாதகருக்கு அவரவர் கர்ம விதிப்படி அனைத்தும் நடந்தேறும்.

– ஜோதிட சிரோன்மணி தேவி

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here