இலங்கையை கலக்கும் 24 பாதாள உலகக்குழுக்கள்… துல்லியமாக சுடும் புலிகளிடம் பயிற்சி பெற்றவர்கள்!

இலங்கையில் தற்போது 24 பிரதான பாதாள உலகக்குழுக்கள் செயற்பாட்டில் உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரதான கும்பலின் கீழ், சுமார் 50 வரையான துணைக்குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

இந்த குழுக்களில் அதிக சக்தி வாய்ந்த குழுக்களாக மாக்கந்துர மதுஷ், கொஸ்கொட சுஜி ஆகியோரின் குழுக்களே கருதப்படுகின்றன. மதுஷ் கைது செய்யப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கொஸ்கொட சுஜி, தற்போதும் டுபாயிலிருந்து தனது குழுவை இயக்கி வருகிறார் விடுதலைப்புலிகளில் உறுப்பினராக இருந்த சினைப்பர் பயிற்சி பெற்ற ஒருவரையும் இந்த குழு இணைத்து வைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு குழுவிலும் தற்போது அதிகளவான ரௌடிகள் அங்கத்தவர்களாக உள்ளனர். சுமார் நூறிற்கும் குறையாதவர்கள் இந்த குழுக்களில் அங்கம் வகிப்பதாகவும், அவர்களில் கணிசமானவர்கள் இராணுவத்தை விட்டு விலகி வந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சிறைச்சாலை பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி தென்னக்கோன் படுகொலை சூத்திரதாரி பொடி லாசி, கரந்தெனியவைச் சேர்ந்த சுத்த டி சில்வா ஆகியோரும் கொஸ்கொட சுஜியின் கும்பலில் முக்கியமானவர்கள்.

அவற்றில் கொஸ்கொட ஸ்டாரும் உள்ளார். ஒரு காலத்தில் கொஸ்கொட சுஜியின் கீழ் இருந்த அவர் இப்போது மதுஷின் குழுவில் உள்ளார். மாத்தறை நிலேகா ஜூவல்லரியில் கொள்ளை நடத்தி, சிக்கி இப்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதேவேளை, இரண்டு கும்பலையும் சேர்ந்த 30 – 40 வரையானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

பாதாள உலகக்குழுக்கள் குறிவைக்கப்பட தொடங்கியதும், பல பாதாள உலக தலைவர்கள் வெளிநாடுகளிற்கு தப்பியோடி விட்டனர்.

சமீபத்தில் ஜம்புகஸ்முலாவில் சுட்டுக் கொல்லப்பட்டவர். பாம்பி சுஜின் போர்வையில் நாட்டை விட்டு வெளியேறுகிறார். மற்றொரு பாதாள உலக குற்றவாளி, ரத்கம விதுர. அவர் இப்போது அமைதியாக இருக்கிறார். கெசல்வட்டவயிலிருந்து செயற்பட்ட இவர்  ஒரு காலத்தில் கொழும்பு பாதாள உலகத்தை கட்டுப்படுத்தியவர்.

மற்றொருவர் நந்தா. நாட்டிற்கு வெளியே இருக்கிறார்.

ரத்மலனவின் பாதாள உலக கும்பல்களில் பலவும் இப்பொழுது இலங்கைக்கு வெளியில் தப்பிச் சென்று விட்டன. அவர்களில் முக்கியமானவரான அஞ்சு டுபாயில் உள்ளார். அவரது எதிரியான ரோஹா சிறையில் இருக்கிறார். அஞ்சுவை ஒருமுறை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி நடந்தது. துப்பாக்கிகள் பொலிசாரிடம் சிக்கியதால், அஞ்சு தப்பித்தார். இதன்பின், ரோஹாவை சிறைக்குள்ளேயே தீர்த்துக்கட்ட அஞ்சு திட்டமிட்டார். அவருக்கு சயனைட் கொடுத்து கொல்ல, ஒரு குழுவிற்கு பணமும் கொடுத்தார். கைதியொருவரை கூலிப்படையாக அமர்த்தி இந்த கொலை முயற்சி நடக்கவிருந்தது. ஆனால், சயனைட்டை சிறைக்குள் கொண்டு சென்றபோது சிக்கியதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது.

இப்பொழுது இலங்கையிலுள்ள பாதாள உலககுழுக்களில் அங்கொட லொக்காவின் குழு சக்தி மிக்கதாக மாறி வருகிறது. களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி பாதாளஉலக பள்ளி சமயங்கை கொன்றதன் பின்னர் அங்கொட லொக்கா பாதாள உலகக்குழுவினரிடையே பிரபல்யமாகி விட்டார்.

தற்போது இந்தியாவில் தலைமறைவாக இருந்து தனது குழுவை இயக்குகிறார்.

ஜம்பட்டா வீதியை சேர்ந்த குடு செல்சியின் குழந்தைகளைம் அங்கொட லொக்கா தன்னுடன் வைத்துள்ளார். குழந்தைகளின் தாயாரை புகுடு கண்ணா, பும்மா ஆகியோர் கொன்றிருக்கிறார்கள். போதைப்பொருள் கடத்தல் முரண்பாட்டால் இந்த கொலை நடந்தது. பும்மா முன்னர் விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் இருந்தவர் என பொலிஸ் தகவல்களில் பதிவாகியுள்ளது. அங்கொட லொக்கா தரப்பும், புகுடு கண்ணா, பும்மா தரப்பும் இதுவரை 6,7 பெரிய மோதல்களில் ஈடுபட்டுள்ளது. இதில் இறுதியாக புகுடு கண்ணாவின் தந்தை கொல்லப்பட்டார்.

பும்மா ஒப்பந்தக் கொலைகளிலும் ஈடுபடுகிறார். கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அண்மையில் கொல்லப்பட்ட விவகாரத்திலும் அவர்தான் தொடர்புபட்டிருந்தார். கண்ணா, பும்மா ஆகியோர் இந்தியாவில் தங்கிருந்து, அடிக்கடி இரகசியமாக கடல் மார்க்கமாக இலங்கை வந்து செல்கிறார்கள்.

தற்போது இலங்கையில் பல பாதாள உலககுழு தலைவர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர். அங்கொட லொக்கா, லடியா ஆகியோருக்கு அடுத்த பெரிய பாதாள உலககும்பல் தலைவனான கிம்புலாஎலா குணாவும் இந்தியாவிலேயே மறைந்துள்ளார்.

தெம்டகொட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவின் ஓ.ஐ.சி டக்ளஸ் நிமல் மற்றும் அவரது மனைவி ஆகியோர், அத்துகிரிய பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிம்புலா எலா குணாவே இந்த கொலைக்கு உத்தரவிட்டார். அவரது அடியாட்கள் பெரும்பாலானவர்கள் இப்போது இந்தியாவில் உள்ளனர். சுரேஷ், கோட்டா காமினி ஆகியோர் இதில் அடங்குவர். முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் சுனில் மெண்டிஸை படுகொலை செய்துவிட்டு கோட்டா காமினி இந்தியாவுக்கு தப்பித்தார்.

இலங்கைக்கு ஹெரோயின் அனுப்ப முயன்றபோது சிக்கி கோட்டா காமினி இப்பொழுது இந்திய சிறையில் உள்ளார்.

பாதாளஉலக குழுக்களின் கோட்பாதராக கருதப்பட்ட கொல்லம், புளூமென்டல் குப்பை மேட்டிற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவர் தன்னைத்தானே துப்பாக்கிதால் சுட்டதை போன்ற தோற்றம் அங்கு இருந்தது. அவருக்கு பதிலாக இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஒருவர், பலமுண்டல் சங்கா ஆகியோர் அந்த குழுவை வழிநடத்தினர். இவர்களும் இந்தியாவில் தலைமறைவாக இருந்த நிலையில், விசா இல்லாத விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ளனர்.

சம்பவாசி இன்னொரு பாதாளஉலககுழு தலைவன். முன்னைய ஆட்சியில் பாதாளஉலகக்குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இவரும் டுபாய்க்கு தப்பியோடினார். ஆட்சி மாற்றத்தின் பின் நாடு திரும்பினார். பொதுத்தேர்தலின் பின்னர் நடந்த அரசியல் பேரணியொன்றில் கலந்துகொண்டபோது, இவரும் இன்னொரு பாதாளஉலகக்குழு உறுப்பினரும், தெமட்டகொட சமிந்தவின் இலக்காக மாறினர். அந்த சம்பவத்தில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

மார்ச் 3, 2016 அன்று தெமட்டகொட சமிந்த தாக்கப்பட்டார். நீதிமன்றத்தில் இருந்து வெலிகட சிறைக்கு அவரை கொண்டு சென்ற பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தெமட்டகொட சமிந்த காயமடைந்து உயிர் தப்பினார். சமிந்த மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் சஞ்சீவ கைது செய்யப்பட்டார்.

முஸ்லிம் பாதாளஉலகக்குழுவாக கஞ்சிபானை இம்ரானின் குழுவே இயங்கியது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்த குழு, கூலிப்படையாகவும் செயற்பட்டது. தற்போது கஞ்சிபானை 6 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்கிறார். இதன்பின் இந்த குழு சிதைவடைந்து, இதன் உறுப்பினர்கள் வெவ்வேறு குழுக்களில் இணைந்து விட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here