30 வருடங்களின் முன் மங்கள கண்ட கனவு இன்றுதான் பலித்தது!

நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்தை தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் மங்கள சமவீரவுக்கு அன்றைய தினமே அனுப்பிவைத்திருந்தார். எனினும் அதனை ஏற்றுக்கொண்டதாக மங்கள சமரவீர அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

“30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக கட்சியால் நியமிக்கப்பட்டேன். அப்போது அந்தக் கட்சியின் இத்தகைய நிலையைப் பெறுவேன் என நான் அப்போது கனவு கண்டேன்” என்று மங்கள சமரவீர தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here