நல்லூர் கந்தனின் மாம்பழ திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவின் 22ம் நாளான இன்று காலை தண்டாயுதபாணி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

நல்லூர் கந்தன் பாலமுருகனாக விநாயகப் பெருமானுடன் இணைந்து வெளி வீதியுலா வந்து மாங்கனியைப் பெற்றுக் கொள்ளும் உற்சவம் இடம்பெற்றது. விநாயகப் பெருமானுக்கு மாம்பழம் வழங்கப்பட்டதால் முற்றும் துறந்து தண்டாயுதபாணியாக முருகப் பெருமான் பழனி ஆண்டவர் சந்திதியில் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு சகல அபிஷேகப் பொருள்களாலும் முழுக்கு இடம்பெற்றது.

கடந்த 6ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாள்கள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நாளை புதன்கிழமை சப்பறத் திருவிழாவும், நாளைமறுதினம் வியாழக்கிழமை தேர்த் திருவிழாவும், வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் சனிக்கிழமை பூங்காவனத் திருவிழாவும், ஞாயிற்றுக்கிழமை புதன்கிழமை வயிரவர் உற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here