புதிய சமிஞ்ஞைகள்

©மதுசுதன்

இன்று உலகளாவிய ரீதியில் காலநிலையில் கண்காணிக்க தக்க மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது மிகவும் அவதானத்திற்குரியது.

அன்மை காலங்களாக அதாவது இந்த வருடத்தில் கூட தெற்காசிய நாடுகளில் பல இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டதும் அதனூடான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் ஏற்பட்டதும் கண்டு அதிரந்து போயுள்ளோம். சீனா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் இந்தியா போன்ற பல பிரதேசங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பல உயிர்களை காவு கொண்டிருந்தது.

2016ஆம் ஆண்டு தமிழகம் வரலாற்றில் என்றும் கண்டிராத ஒரு பெரும் மழை வீழ்ச்சியையும், வெள்ளப் பெருக்கையும் உயிரிழப்பையும் சந்தித்திருந்தது.

அதாவது இன்றைய நாள் தொடக்கம் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இயற்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய மாற்றங்களை வெறுமனே கடந்து விட்டு போக முடியாது.

இந்த மூன்று வருடங்களுக்குள் அல்லது மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குள் இயற்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற மாற்றங்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனிமனிதனும் கடந்து போகக் கூடிய விடயங்களில் அவை மறந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் இந்த குறிப்பிட்ட காலங்களுக்குள் நடைபெற்ற இயற்கை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்ற பொழுது இயற்கை இந்த உலக மக்களுக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்லி வைக்க விரும்புகிறது.

இன்று பல நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனால் ஏற்படுகிற காலநிலை மாற்றங்கள், இயற்கை அழிவுகள், உயிரிழப்புகள் என்பன அதிகரித்துச் சென்ற அதே தருவாயில் தற்பொழுது மிகவும் ஆபத்தானதாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த அமேசன் காட்டில் ஏற்பட்ட தீ, அமேசன் காட்டில் நடைபெறுகிற காடழிப்புக்கள் என இவ்வாறு உலகத்தை மூடியுள்ள அத்தனை இயற்கை வளங்களையும் சுரண்டி விட்டு நாங்கள் வெறுமனே மனித இனம் மட்டுமே புவியில் வாழ முடியும் என்ற இயற்கையை விஞ்சிய சித்தாந்த கோட்பாட்டுக்குள் மனித இனம் மூழ்கி இருப்பதால், இயற்கையோடு இணைந்த வாழ்வு முறைகளை தொலைத்து விட்டதனால், ஏதோ செயற்கைகளோடு மட்டும் கூடிக் குலாவி இந்த உலகத்தில் வாழ்ந்து விட முடியும் என்ற மாயை எண்ணத்தினாலும் இன்று இயற்கை தன் வீரியத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது.

இயற்கையை நேசிக்க முடியாமலும் நேசிக்க தெரியாமலும் அதனோடு இணைந்து வாழ பழகாமையிலும், அதனை பகைத்தமையினாலும், இயற்கையை வேண்டாவெறுப்பாக மனித இனம் பார்த்தததனாலும் வந்த விளைவு இன்று இயற்கை இந்த பூமியை விவாகரத்துச் செய்ய ஆரம்பித்துவிட்டது.

இயற்கை மனிதனுக்கு மட்டுமல்ல இந்த இயற்கை புவியிலுள்ள எத்தனையோ கோடான கோடி இனங்களுக்குள் ஒன்றான மனித இனமும் வாழும் இடமாக இருக்கிறது. ஆனால் அந்த இயற்கையை அந்த கோடான கோடி இனங்களில் ஓர் இனமாக இருக்கிற மனிதன் எப்போது தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தானோ, அந்த இயற்கையை செயற்கைகள் கொண்டு எப்போது நிரப்ப ஆரம்பித்தானோ அன்றே உலகத்தின் முடிவு கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட்டது.

வெள்ளப்பெருக்கு, புயல், சூறாவளி, சுனாமி எரிமலை வெடிப்புக்கள், இயற்கை வரட்சி, பூமி பிளவுகள், உறைபனி, கடலரிப்பு, கடல் நகரப் பகுதிக்குள் புகுதல், அரிய இனங்களின் இறப்பு, பனிமலைகள் உருகுதல், கடல் மட்டம் அதிகரித்தல் போன்ற பல இயற்கையின் கோர முகங்களை இயற்கையானது இந்த அண்மைய காலப்பகுதிக்குள் அது அதிகமாக வெளிப்படுத்தி நிற்கிறது.

இவை பூமி மிகவும் எதிர்நோக்கி வருகிற ஒரு மாபெரும் பிரச்சினைகளாகும்.

இந்த மூன்று ஆண்டு காலப்பகுதிக்குள் உலகத்திலேயே நடைபெற்ற அத்தனை இயற்கை அழிவுகளையும் தொகுத்து பார்க்கின்றபோது இயற்கை இந்த பூமிக்கு ஏதோ ஒரு விடயத்தை இந்த பூமியில் வாழும் இனங்களுக்கு ஏதோ ஒரு விடயத்தை காண்பிக்க விரும்புகிறது, சொல்லி வைக்க விரும்புகிறது. இனியும் நீ இயற்கையை நேசிக்க தவறினால், இனியும் நீ இயற்கையோடு இணைந்து என்னை நாசமாக்கினால் நான் இந்த பூமியை விவாகரத்து செய்யவும் ,இந்த பூமியை அழிக்கவும் தயாராகி விட்டேன்.

என்ற அந்த ஒற்றைச் சமிஞ்சையை அது எப்போதோ காண்பிக்க தயாராகி விட்டது. அந்த சமிஞ்சையை மனிதர் புரிவதும், புரியாததும் இயற்கைக்கு பரவாயில்லை அது தன் வேலையை தன் கடமையை சரியான நேரத்தில் செய்யும்.

கடந்த ஆண்டு மறைந்த அண்டவியல் விஞ்ஞானி மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் கூறியது போல மனிதன் 2050ஆம் ஆண்டுக்குள் இன்னோர் வாழக்கூடிய கிரகத்தை கண்டு பிடித்து குடியேறி விட வேண்டும் என்று சொல்லிவிட்டு மறைந்திருக்கிறார் .

ஆகவே எல்லாக் கூற்றுக்களும் மெய்ப்படும் விதமாக இன்று இயற்கை மனித இனத்திற்கு ஒரு அபாய சபிஞ்ஞையை வெளிப்படுத்த ஆரம்பித்து இருக்கிறது.
இந்த சமிஞ்ஞையை புரிந்து கொண்டு மனித இனம் மற்ற இனங்களுக்கும் ஆக இந்த இயற்கையை பாதுகாத்து தற்காத்துக்கொள்ளுமா? இல்லை, 2050 இல் வேறொரு யாருமற்ற கிரகத்துக்கு குடி பெயர வேண்டுமா? என்பதை இனி ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மக்களும், ஒவ்வொரு தனிமனிதனும் சிந்திக்க வேண்டிய தருணம் நெருங்கி விட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here