எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கிறார் தவராசா: ஆறு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டது!

வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அந்த பதவியை அடுத்த சில தினங்களில் இழப்பதற்கான வாய்ப்பு தென்படுகிறது. தவராசாவை நீக்கிவிட்டு, புதிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் நியமிக்கப்படக்கூடிய ஏதுநிலைகள் உருவாகியுள்ளன. வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப்பேரில், ஆறுபேர் புதிய எதிர்க்கட்சி தலைவரை கோரி எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவராசா எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்க தார்மீக அறம் கிடையாது, அவரைவிட அதிக உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் செய்யுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர கடிதமூலம் கோரிக்கை விடுத்திருந்தபோதுகூட, வடக்கு அவைத்தலைவர் தவராசாவிற்கு சார்பாக செயற்பட்டு, அவரை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்க வழியேற்படுத்தி கொடுத்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவர் கையெழுத்திட்டு, எதிர்க்கட்சி தலைவராக வவுனியாவை சேர்ந்த ஜெயதிலகவை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தவராசாவை ஆதரித்து மூன்று உறுப்பினர்கள் இருந்தனர். தனது பதவிக்கு ஆபத்து என்றதும், வடமராட்சியை சேர்ந்த சுதந்திரக்கட்சி உறுப்பினர் அகிலதாஸ் உடன் சமரச பேச்சு நடத்தி, அவரை கையெழுத்தில் இருந்து விலக வைத்தார் தவராசா. இதையடுத்து இரு தரப்பிலும் நான்கு உறுப்பினர்கள் என சமனனிலையிலிருந்தது.

தற்போது, ஆறு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, ஜெயதிலகவை எதிர்க்கட்சி தலைவராக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகலதாஸூம் இம்முறை ஜெயதிலகவிற்கு ஆதரவாக கையெழுத்திட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, கிளிநொச்சி ஈ.பி.டி.பி உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரே தற்போது கையெழுத்திடவில்லை.

எட்டு உறுப்பினர்களில் ஆறுபேர் புதிய எதிர்க்கட்சி தலைவரை கோரும் நிலையில், தார்மீக ரீதியான எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை தவராசா இழந்து விட்டார். அவரை தொடர்ந்து பாதுகாத்தால் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூடுதல் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here