அதிக வேகத்தால் விபத்து!

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் பிக்கப் வாகனமும் ஹைஏஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.

மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம், ஹைஏஸ் வாகனத்துடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

பிக்கப் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்காரணமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத போதிலும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here