சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஜனாதிபதியிடம் நேரில் அதிருப்தி தெரிவிக்கும் கூட்டமைப்பு!


இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு தமது பலமான அதிருப்தியையும், எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் தெரிவிக்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு நாளை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும். இன்று மாலை ஜனாதிபதியின் செயலாளரை தொலைபேசியில் அழைத்து, இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையையடுத்து, நாளைய சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது, இதுவரை வாக்களித்து நிறைவேற்றப்படாத விவகாரங்கள் குறித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி பலமுறை வாக்களித்தும், காணி விடுவிப்பு இன்னும் முழுமையடையவில்லை. அதேபோல தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டவுள்ளது.

அத்துடன், இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதென இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here