சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்தவர்கள் அபராதத்துடன் விடுதலை!

அவிசாவளையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர், 300,000 ரூபா அபராத தொகை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சீதாவக்க ஆற்றில் இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைக்கு சொந்தமான நிலத்தில் அகழ்வில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்களிடமிருந்து ஒரு ஒக்ஸிஜன் சிலிண்டர், முகமூடி மற்றும் 50 அடி நீளமுள்ள நைலோன் கயிறு பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகாரசபையின் பிராந்திய அலுவலகத்தில் முற்படுத்தப்பட்டு, அபாரதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here