சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது!


கச்சதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படடவர்கள் தமிழகத்தின் இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்படட மீனவர்கள் பயன்படுத்திய படகு காரைநகர் கடற்படையினர் தடுத்து வைத்துள்ளதுடன் கைது செய்த மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here