சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ மிருக வைத்தியசாலைக்கு அருகாமையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர், பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (21) இரவு 8.30 மணி அளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதோடு, மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யபட்ட 6 சந்தேக நபர்களும் பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளதோடு, எதிர்வரும் 27 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here