கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கொடியேற்றம்!


மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று (21) கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

மகாதுறவி சுவாமி ஓங்காரானந்தா சரஸ்வதியினால் உருவாக்கப்பட்ட ஒரு சித்திர்பீடம் இது.

ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயம் ஒன்றில் தமிழ் முறைப்படி வேதங்கள் ஓதப்பட்டு பூசை வழிபாடுகள் இங்கு இடம்பெற்று வருகிறது. தமிழ் பூசை வழிபாடுகளில் இலங்கையின் வேறெந்த ஆலயத்திலும் இந்த ஆலயமளவிற்கு நீண்ட வரலாறு இல்லை.

ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வுகளும் ஆகம விதிகளுக்கு அப்பால் பக்தர்களும் இணைந்து கொடியேற்ற நிகழ்வினை நடத்துவது வழக்கமாகும்.

இன்று காலை கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து மஹா யாகம், அபிசேகம் ஆராதனை நடைபெற்று மூலஸ்தானத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு ஆலய உள்வீதி உலா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடித்தம்பம் அருகில் தமிழில் கொடியேற்ற பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 29ம் திகதி தேர் உற்சவமும் 30ம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

ஈழத்து திருச்செந்தூர் என இந்த ஆலயம் சிறப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கொடியேற்றத்தின் புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கு அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here