கட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்! (photo)

இன்று காலை புத்தளம், அநுராதபுரம் வீதியின் அளுத்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவை சேர்ந்தவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உறவினர்களை வழியனுப்பி விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்தில் சிக்கினர்.

அவர்கள் பயணம் செய்த ஹைஏஸ் வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானது.

சாலியவெவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here