ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார் மகேஷ் சேனநாயக்க!


முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு ஓகஸ்ட் 17 முதல் அமலுக்கு வந்துள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் சேனநாயக்க  2017 ஆம் ஆண்டில் 22வது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் நேற்று முன்தினம் (18) முடிவடைந்த நிலையில், நேற்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை புதிய ராணுவ தளபதியாக ஜனாதிபதி நியமித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here