உப தலைவரும் விலகுகிறார்: கட்சிக்குள் தனி ஆளாக மாறுகிறாரா ஆனந்தசங்கரி?


தமிழர் விடுதலை கூட்டணியில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார், அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை.

மட்டக்களப்பில் நேற்று (19) செய்தியாளர்கள் மத்தியில் தனது தீர்மானத்தை அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தலைவர் பிரபாகரனால் பெற்றுக்கொடுக்க முடியாத எந்த தீர்வையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மக்களிற்கு பெற்றுக்கொடுக்க முடியாது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களிற்கு தேவையானவற்றை எழுத்துமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் கிழக்கில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். வெற்றிபெறும் தரப்புடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்க வேண்டும்.

ஆரம்பகாலம் தொடக்கம் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினராகவே உள்ளேன். கட்சியின் சிரேஷ்ட உப தலைவராகவும், மாவட்ட தலைவராகவும் இன்றுவரை இருந்து வருகிறேன்.

எனக்கு பதவிகளை தந்துவிட்டு, என்னை பகடைக்காயாமாக பாவிக்கலாமென்ற எண்ணத்துடன் கட்சி செயற்பட்டு வருகிறது. நான் எந்தக்கட்சிக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ மாட்டேன். பதவியை வைத்து என்னை பணியவைக்க முடியாது. இனி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இயங்குவதில்லையென அறிவித்துக் கொள்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here