புகையிரதம் மோதிய கன்றுக்குட்டிகள்

வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரதம் மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் இறந்துள்ளதுடன், ஒரு கன்று காயமடைந்தள்ளது.

இன்று காலை 20.8 யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகளை மோதியுள்ளது. இதில் இரண்டு கன்றுகள் சம்பவஇடத்திலேயே பலியானதுடன் ஒரு கன்று காயமடைந்தது.

காயமடைந்த கன்றுக்கு அப்பகுதி மக்கள் சிகிச்சை அளித்திருந்தனர்.

இதேவேளை தாண்டிக்குளம் பகுதியில் அண்மையிலும் 10 மாடுகள் புகையிரத்துடன் மோதுண்டு பலியாகியிருந்ததுடன் கால்நடைகள் புகையிரத்துடன் மோதுண்டு வரும் சம்பவங்கள் வவுனியாவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here