எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் சந்திரிகா?


சந்திரிகா குமாரதுங்கவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பது குறித்து சுதந்திரக்கட்சிக்குள் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் இந்த விடயத்தில் இறுதியான தீர்மானத்தை சு.க எடுக்கும் என தெரிகிறது.

ஐ.ம.சு.கூட்டமைப்பின் நியமன பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மரணத்தையடுத்து, அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

வெற்றிடமாக உள்ள ஐ.ம.சு.கூ நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சந்திரிகாவை நியமிக்க வேண்டுமென சுதந்திரக்கட்சிக்குள் அப்பிராயம் வலுத்துள்ளது. இது குறித்து, கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் உறுப்பினர்கள் ஆலோசித்துள்ளனர்.

சந்திரிகாவை தேசியப்பட்டியல் எம்.பியாக நியமித்து, அவரை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த அண்மையில் கட்சிதாவி, பெரமுனவின் தலைமை பொறுப்பை ஏற்றார். இதன்மூலம், சட்டபூர்வமாக அவர் சு.க உறுப்புரிமையையும், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் இழக்கிறார்.

சந்திரிகாவை நியமன எம்.பியாக்குவதற்கு ஜனாதிபதியும் கொள்கையளவில் இணங்கியுள்ளார்.

செப்ரெம்பர் 3ம் திகதி சுதந்திரக்கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here