வைத்தியசாலைக்குள் கையடக்க தொலைபேசி திருடி வந்த இளைஞன் சிக்கினார்!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசிகளை திருடி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தசம்பவம் நேற்று  (19) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கையடக்க தொலைபேசிகள் திருட்டுப் போயுள்ளன. இதனையடுத்து, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமராவின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு நேற்றும் குறித்த இளைஞன் வந்துள்ளார். வந்ததுமல்லாமல், வழக்கம்போல நோயாளர் விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த தாதியர் ஒருவரின் கையடக்க தொலைபேசியை திருட முற்பட்டவேளை மடக்கி பிடிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here