முல்லைத்தீவில் திடீரென கறுப்பாக மாறிய கடல்: பீதியில் மக்கள் (படங்கள்)

முல்லைத்தீவு கடல் பகுதி நேற்று (19) மாலை திடீரென கறுப்பு நிறமாக மாறியது. இதனால் மீனவர்களும், கரையோர மக்களும் அச்சமடைந்தனர்.

முல்லைத்தீவின் நாயாறு தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்பரப்பரப்பிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்தது. கடற்கரை பகுதி திடீரென கறுப்பு நிறமாக மாறியது.

அதேநேரம் கடற்கரையில் அலை அடித்து சென்ற இடங்களும் கறுப்பு நிறமாக மாறியிருந்தது.

இந்த தகவல் காட்டுத்தீயாக பரவ, கடற்கரையை பார்க்க பலர் படையெடுத்தனர். இதேவேளை, ஏதேனும் இயற்கை அனர்த்தத்திற்கு முன்னோடி எச்சரிக்கையாக இருக்குமோ என்ற பயத்தில் சிலர் இடத்தை விட்டு அகன்று சென்றனர்.

இந்த மாற்றம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கும் அறவிக்கப்பட்டது.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு சென்னையின் சில பகுதி கடற்கரைகள் நீல நிறமாக மாறியிருந்தன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த வல்லுனர்கள், இது சாதாரண ஒரு இயற்கை நிகழ்வு என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here