வைத்தியசாலை 6வது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை!


பொரலஸ்கமுவவில் உள்ள சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனை கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து நேற்று (18) குதித்து பெண்யொருவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையின் மனநல பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 28 வயதான மனநலம் பாதிக்கப்பட்டவராவார். இவர் பன்னிபிட்டியில் வசிப்பவர் என பொலிசார் தெரிவித்தனர்.

அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here