பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஆளுனர் தீர்மானம்


மலையகத்தில் தொடர்ந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் பல சேதங்கள் ஏற்பட்டதோடு பல குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க மத்தியமாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் நவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை சீற்றத்தால் அனர்த்தத்திற்கு உள்ளாகிய இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அதற்கான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார்.

(நீலமேகம் பிரசாந்த்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here