பொகவந்தலாவவில் மனித எச்சங்கள்: 9 மாதங்களின் முன் காணாமல் போனவருடையதா?


பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை பூசாரி பிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் மனா தோப்புகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் கையடக்க தொலைபேசி கண்டெடுத்த பொதுக்கள் அதை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். கையடக்க தொலைபேசியில் உள்ள தகவல்களுக்கு அமைய ஆரம்பிக்கபட்ட விசாரணைகளிலேயே, அந்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு கானாமல் போயுள்ள நபரின் எச்சங்களே மீட்கப்பட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். மனித எச்சங்கள் கிடக்கும் பகுதியில் டி.சேட் ஒன்றும் நீள காற்சட்டையும் மீட்கப்பட்டுள்ளது. அது, காணாமல் போன நபருடையதென கருதப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அட்டன் நீதிமன்ற நீதவானிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here