UPDATE: கைதான யாழ் வைத்தியரிடம் ரிஐடி துருவித்துருவி விசாரணை: தேடப்பட்டு வந்தவராம்!

பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் சி.சிவரூபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினரே கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணியளவில் பளை வைத்தியசாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர் எனத் பயங்கரவாத தடுப்ப பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்றிரவு 8 மணியளவில் ஆனையிறவு சோதனைச்சாவடியில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் பளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு, கடமைகள் பிறிதொரு வைத்தியரிடம் கையளிக்கப்பட்ட பின்னரே, இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.

முன்னைய செய்தி- நள்ளிரவில் பரபரப்பு: யாழ் வைத்தியரை கைது செய்த இராணுவம்!

பளை பிரதேசவைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

பளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியான சி.சிவரூபன் என்பவரே கைதாகியுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியிருந்தார்.

நேற்றிரவு 10 மணியளவில், பளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள போதும், சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினராலேயே ‘அழைத்து’ செல்லப்பட்டதாக வைத்தியசாலை தரப்புக்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

சில மாதங்களின் முன்னர் பளையில் முன்னாள் போராளியொருவர் ஆயுதங்களுடன் கைதாகிய விவகாரத்தில், ஏற்கனவே அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here