இவ்வார ராசிபலன்கள் (18.8.2019- 24.8.2019)

புதன், ராகு, சுக்கிரன், சந்திரன் அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். இனிய எண்ணங்கள் மனதை உற்சாகப்படுத்தும்.
பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். நண்பரின் உதவி எதிர்பாராமல் கிடைக்கும். இளைய சகோதர வகையில் சுப நிகழ்ச்சி நடத்தலாம்.புத்திரர் உங்கள் சொல்லை மதித்து செயல்படுவார். தாமதமான விவகாரங்களில் அனுகூலத்தீர்வு கிடைக்கும். மனைவியின் மனம், செயலில் புத்துணர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் தமது கடமையை உணர்ந்து செயல்படுவர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நன்கு படித்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சுக்கிரன், குரு ,சந்திரன் தாராள நற்பலன் வழங்குவர். செயல்களில் உறுதி நிறைந்த மனதுடன் ஈடுபடுவீர்கள்.
பொதுநலப் பணிகளில் ஆர்வம் வளரும்.இளைய சகோதரரிடம் விவாதம் பேசக்கூடாது. தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.புத்திரர் படிப்பு, வேலையில் புதிய அனுபவம் காண்பர்.நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார்.தொழில் ,வியாபாரத்தில் லாப விகிதம் குறைப்பதால் வளர்ச்சி கூடும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து பணிபுரியவும். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

சுக்கிரன் ,செவ்வாய் ,சூரியன், சந்திரனால் தாராள நன்மை ஏற்படும். சுற்றுப்புற சூழ்நிலை சாதகமாக அமைந்திடும்.குடும்ப தேவைகளை தாராள பணச்செலவில் பூர்த்தி செய்வீர்கள்.
வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.புத்திரர் படிப்பு, செயல்திறனில் மேம்படுவர்.நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.எதிரியால் உருவான தொந்தரவு பலமிழக்கும். மனைவியின் பேச்சும் ,செயலும் நம்பிக்கையை தரும்.வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். தொழில், வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு சேமிப்பாகும்.பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.பெண்கள் உறவினர்களை உபசரித்து நற்பெயர் பெறுவர். மாணவர்கள் புதியவர்களுடன் பழகுவதில் நிதானம் வேண்டும்.
பரிகாரம்: குரு வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

குரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரரால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். உங்கள் வாழ்வியல் நடைமுறை சீராகும்.

தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வாகனப்பயணம் பாதுகாப்பாக அமையும். புத்திரர் தமது திறமையை பயன்படுத்தி படிப்பு, வேலையில் முன்னேற உதவுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்களுக்கு மனக்கவலை நீங்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பர்க்கும் உதவுவர்.
பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

சுக்கிரன், சந்திரன், ராகு ஓரளவு நற்பலன் வழங்குவர். உங்கள் மனம் செயலில் புத்துணர்வு ஏற்படும்.
திட்டமிட்ட பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர் உதவிகரமாக நடந்து கொள்வர்.வெளியூர் பயணம் எதிர் பார்த்த நன்மையை தரும்.புத்திரர் படிப்பு, வேலையில் அதிக கவனம் கொள்வர். விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்க புதிய அணுகுமுறை பயன்படும். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி உண்டு.தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணச்சேமிப்பு கூடும். பணியாளர்கள் கடின உழைப்பால் சலுகையும், நற்பெயரும் பெறுவர்.பெண்கள் தாராள பணவரவில் விரும்பிய பொருட்கள் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.
சந்திராஷ்டமம்: 18.8.19 காலை 10:06 மணி – 20.8.19 இரவு 9:11 மணி .
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும்.பணிகளை புதிய உத்தியுடன் அணுக வேண்டும்.வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும்.
பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் திருப்திகரமாகும். புத்திரர் பெற்றோரின் சொல் ஏற்று செயல்படுவர். உறவினர், நண்பர்களிடம் அன்பை பகிர்ந்திட நல்ல நிகழ்வு ஏற்படும். அரசு சார்ந்த நன்மையை பெற தாமதமாகலாம். விருந்து ,விழாவில் கலந்து கொள்வீர்கள்.இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். மனைவியின் சொல்லும் ,செயலும் பெருமையை தேடித் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்.பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் நகை இரவல், கொடுக்க வாங்க வேண்டாம்.மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம்: 20.8.19 இரவு 9:12 மணி – 22.8.19 மாலை 6:13 மணி .
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் நற்பலன் கிடைக்கும்.தாமதமான செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.
விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் பெற்றோரின் சொல் கேட்டு நடப்பர்.குடும்பத்தில் வெகுநாள் இருந்த பிரச்னையின் தீவிரம் குறையும். அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெற வேண்டாம்.மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். தொழிலில் போட்டி குறைந்து உற்பத்தி ,விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு வெற்றியை தரும்.

சூரியன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும்.உங்கள் பேச்சில் நிதானம் இருக்கும். திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும்.விலகிய தாய்வழி உறவினர் சொந்தம் பாராட்டுவர்.
புத்திரர் பெற்றோரிடம் தயக்க குணத்துடன் பழகுவர்.பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும்.நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும்.தொழில் ,வியாபாரத்தில் இடையூறு விலகும். அரசு உதவி பெறலாம். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணியிலக்கை நிறைவேற்றுவர்.பெண்கள் பணச்செலவில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு வெற்றியளிக்கும்.

புதன், சந்திரன், ஓரளவு நற்பலன் வழங்குவர்.குடும்பத்தில் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். நண்பர்களால் ஓரளவு உதவி கிடைக்கும்.
புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதல்களை தயக்கமுடன் ஏற்றுக்கொள்வர். விவகாரங்கள் அணுகாத சுமூக சூழல் நிலவும்.எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கூடும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். தந்தை வழி உறவினர் உதவி கேட்பர். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள் கடமையுணர்வுடன் பணிபுரிவர்.பெண்கள் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி மேற்கொள்வர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

குரு, ராகு ,சந்திரனால் நற்பலன் கிடைக்கும்.நண்பரின் உதவி எதிர்பாராமல் கிடைக்கும்.
தாமதமான செயல் புதிய முயற்சியால் நிறைவேறும்.தம்பி, தங்கை உங்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவர்.வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும்.புத்திரர் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.அளவான உழைப்பும், சீரான ஓய்வும் உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும்.மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம்.தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும்.பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும்.பெண்கள் குடும்ப நலன் பேணிக் காத்திடுவர். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் வேண்டும்.
பரிகாரம்: சிவன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

கேது, புதன், சனீஸ்வரர் அனுகூல பலன் தருவர்.நண்பரின் உதவியுடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள்.

தாய்வழி உறவினர் அதிக அன்பு ,பாசம் கொள்வர்.புதிய வீடு, வாகனம் வாங்க பணவசதி கிடைக்கும். புத்திரரின் செயல் குறையை சமயோசிதமாக சரி செய்வீர்கள்.மனமும், உடலும் புத்துணர்வு பெறும்.மனைவி வழி உறவினர் உங்கள் நல்ல குணத்தை பாராட்டுவர். வெளியூர் பயணம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்.தொழில் ,வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்றம் தேவைப்படும்.பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணிபுரிவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

சூரியன் ,சுக்கிரன், செவ்வாய், குரு அதிர்ஷ்டகரமான பலன் வழங்குவர்.சமூக நிகழ்வு மனம், செயலில் புதிய ஆற்றல் தரும்.

பணிகளை திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள்.வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும்.புத்திரரின் சேர்க்கை, சகவாசம் அறிந்து இதமாக நல்வழியில் நடத்துங்கள்.எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.பிறர் பார்வையில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். மனைவியின் சொல்லும், செயலும் குடும்ப நலனுக்கு உதவும். தொழில் ,வியாபாரத்தில் போட்டி குறைந்து தாராள பணவரவு கிடைக்கும்.பணியாளர்களுக்கு பணியிடச் சூழல் அனுகூலமாக அமைந்திடும்.பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here