அரிசியை எண்ணிய அப்பாவி மாமியார்- மருமகள்: நகையை சுருட்டிய போலி ஜோதிடர்கள்

மணப்பாறையில், வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம், ஜோதிடர்கள் எனக் கூறி, நகைகளை பறித்துச் சென்ற ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள, கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர், வெள்ளப்பொண்ணு (55). இவரது மருமகள், மீனா (27). நேற்று முன்தினம் மாலை, மாமியார், மருமகளும், வீட்டில் இருந்த போது, அங்கு வந்த, இரு மர்ம நபர்கள், ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளனர். இருவரையும், வீட்டிற்குள் அனுமதித்தனர். இருவரிடமும், ‘நகைகளை கழற்றி வைத்தால் தான், ஜோதிடம் கணிக்க முடியும்’ என, மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.

உடனே அவர்களும், தாங்கள் அணிந்திருந்த, 4 சவரன் நகையை கழற்றி வைத்து உள்ளனர்.மர்ம நபர்கள், ஒரு கைபிடி அளவு அரிசியை, இருவரிடமும் கொடுத்து, தனித் தனியாக அறைக்குள் சென்று, எண்ணி வருமாறு கூறினர். இருவரும் அரிசியை எண்ணி முடித்தப்பின், வெளியே வந்து பார்த்த போது, நகைகளுடன், மர்ம நபர்கள் காணாமல் போனது கண்டு,அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வழக்கு பதிந்த, மணப்பாறை போலீசார், மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here