திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பிணமாக கொண்டு வந்த மணமகன்


திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மணமகனுடன் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் பொறையாரில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சித்ரா. இவருக்கும் திருச்சி சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றி வரும் ராஜ்குமார் என்பவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் ராஜ்குமார் சித்ராவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ராஜ்குமார் சித்ராவை இரவு திருச்சிக்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து பரசலூரில் உள்ள சித்ராவின் வீட்டிற்கு ஆம்புலன்சில் வந்த ராஜ்குமார், சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது உடலை இறக்கி வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சித்ராவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here