பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுபவர் இவரா?


பிக் பாஸ் 3யின் இந்த வாரம் யாரு வெளியேறவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 54 நாள் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து 10 பேருடன் இந்த நிகழ்ச்சி நகர்ந்து செல்கிறது.

இந்த நிலையில் இதில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

ஆனால் அவர் சரியாக கண்டெண்ட் கொடுக்காததால் மீண்டும் பிக் பாஸ் வனிதாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து தனது TRBயை ஏற்றிக்கொண்டது. இந்த நிலையில் இந்த வார நொமினேஷன் லிஸ்டில் அபிராமி, முகின், லொஸ்லியா, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர்.

தற்போது இதிலிருந்து அபிராமி வெளியேறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முகின் மேல் காதல் வயப்பட்டு இவர் செய்த சில செயல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியதால் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். அதனால் இவரே வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here