பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சி?

பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதா வந்த பிறகு போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து சண்டை போட்டு வருகின்றனர். தற்போது வனிதாவுடன் சேர்ந்து கொண்டு மதுமிதா செய்யும் வேலைகள் ஹோஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் உள்ளது.

அபிராமிக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று ஆண்கள் அணிக்கு எதிராக பேசிய மதுமிதா இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமை பொறுப்பைச் சேரன் தவிர வேறு யாரும் விரும்பாததால் ஆண்கள் அணிகளுடன் பெண்கள் சேர்ந்து கொண்டனர்.

அதை தாங்க முடியாத மது நேற்று கமரா முன்பு நின்று, “நான் யாருக்காகப் பேசினேன் என்றே தெரியவில்லை. என்னை முட்டாள் ஆகிவிட்டார்கள் போல தெரிகிறது. பின்னாடி பேசிவிட்டு மீண்டும் அவர்களிடமே சென்று நன்றாக பேசுகிரகர்கள்“ என்று புலம்பி தள்ளினார்.

தற்போது அந்த விரக்தியால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. முன்னதாக இதே போன்று தான் முகின், வனிதாவை அடித்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. அதுபோல இதுவும் இருக்கலாமென கருதப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here