கல்லறையை தயார் செய்த ரேகா!

கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரேகா. சிலகாலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் மீண்டும் படங்களில் குணச்சித்ர நடிகையாக நடித்து வருகிறார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடித்திருக்கும் பல படங்களை பலரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், என்னுடைய அப்பா, நான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும்தான் பார்த்தார். அவருக்கு, நான் சினிமா பக்கம் போனது துளிகூட பிடிக்கவில்லை. கடைசி வரை அதே எண்ணத்திலேயே இருந்தார்.

ஆனால், அவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நானும், அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தேன். அதன் வடிவாக, கீழ்பாக்கத்தில் அவருக்கு கல்லறை எழுப்பினேன்.

எங்கப்பாவின் கல்லறை இருக்கும் இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என கேட்டிருக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பின், அப்பா பக்கத்தில் தான் என்னுடைய உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன் என கூறியிருக்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here