கார்த்தி 19 பட டைட்டிலை லீக் செய்த ரஷ்மிகா!

கார்த்தி 19 படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது படம். ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. ஆன்டனி ரூபென் எடிட்டிங்.

இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கி நடந்து வருகின்றது. படத்தின் தலைப்பு “சுல்தான்” என முன்னரே கிசுகிசுத்தனர். எனினும் படக்குழு இன்றும் கார்த்தி 19 என்பதையே சொல்லி வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ கூட வெளியே வராமல் பாதுகாப்பாக உள்ளனர் படக்குழு.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சுல்தான் நான்காம் நாள் ஷூட்டிங் என்றும், கெட் அப் போட்டோ நீங்க பார்க்க முடியாதே என உடையின் போட்டோவை அப்லோட் செய்தார்.

என்ன மேடம் உங்க லுக் எப்படி என சொல்லமால் உஷாரா இருக்கீங்க, ஆனால் படத்தின் தலைப்பை போட்டு உடைச்சு வைச்சுடீங்க என நெட்டிசன்கள் செல்லமாய் கலாய்த்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here