காஷ்மீர் விவகாரம் தொடர்பில் ஐ.நாவில் ஆய்வு!

காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று ஐ.நா பாதுகாப்புசபையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட நாடு களான இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவானது காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது.

அதன்படி, இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருந்தபோதிலும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் அம்மாநிலம் வராது. இந்தியாவின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த யாரும் காஷ்மீரில் எந்த சொத்துகளையும் வாங்கவோ, நிர்வகிக்கவோ முடியாது. காஷ்மீரின் குடிமக்கள் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அம் மாநில சட்டப்பேரவைக்கு மட்டுமே உண்டு. காஷ்மீர் சட்டப்பேரவையின் அனுமதி இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களை அங்கு செயல் படுத்த முடியாது என்பன உள் ளிட்ட ஏராளமான சலுகைகளை 370-வது சட்டப்பிரிவு வழங்கி வந்தது.

இந்நிலையில், இந்த சட்டப்பிரிவு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5ம் திகதி நீக்கியது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இது தொடர்பான மசோதாவையும், தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

காஷ்மீர் மக்களின் சுயாதீனத்தை பறிக்கும் இந்த நடவடிக்கை உலகளாவிய எதிர்ப்பை சம்பாதித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக் கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் விவகாரம் ஐ.நா சபையில் இருக்கும்போது, இந்தியா எவ்வாறு இதுபோன்று தன்னிச்சையான முடிவை எடுக்க முடியும் என கேள்வியெழுப்பியது. மேலும், இதுதொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வேண்டும் என ஐ.நாவில் பாகிஸ்தான் சார்பில் அண்மையில் முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைவர் ஜோனா ரொனேக்காவிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துமாறு சீனா தரப்பில் நேற்று முன்தினம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன்பேரில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் நேற்று ஆலோசனை நடத்தியது. இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் கலந்து கொண்டன. ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தக் கூட்டத் தில் பங்கேற்க அனுமதி வழங்கப் படவில்லை.

இந்தக் கூட்டமானது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் வழக்கமான அரங்கில் நடைபெறாமல், வேறொரு தனி அறையில் நடைபெற்றது.

ரஷ்யா உறுதி

இதனிடையே, இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ரஷ்யாவின் ஐ.நா. தூதர் டிமிட்ரி பாலியான்ஸ்கி, அங் கிருந்த செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்பது இந்தியாவின் உள் விவகாரம். மேலும் இது, இந்தியா – பாகிஸ்தான் என்ற இரு தரப்புக்கு இடையேயான பிரச்சினை என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு ஆகும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் தெரி வித்தார்.

இந்நிலையில், சுமார் 2 மணிநேர ஆலோசனைக்கு பிறகு இந்தக் கூட்டம் நிறைவடைந்தது. எனினும், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here