கனடாவின் மக்கள் கட்சியின் முதல் தமிழ் வேட்பாளராகும் தமிழர்!

எதிர்வரும் கனடிய பொதுத் தேர்தலில் கனடாவின் மக்கள் கட்சி (People’s Party of Canada) சார்பில் தமிழரான ஜெரமியா விஜயரத்னம் போட்டியிடுகின்றார்.

கனடாவின் மக்கள் கட்சியின் ஸ்காபரோ மத்திய தொகுதி வேட்பாளராக இவர் போட்டியிடுகின்றார். இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

இதன் மூலம் கனடாவின் மக்கள் கட்சியின் முதல் தமிழ் வேட்பாளராக ஜெரமியா விஜயரத்னம் இடம்பிடிக்கிறார்.

கொன்சர்வேட்டிக் கட்சியில் இருந்து விலகிய மக்சிம் பெர்னியரால் 2018இல் கனடாவின் மக்கள் கட்சியை உருவாக்கப்பட்டது.

ஜெரமியா விஜயரத்னம் கடந்த மாநகர சபைத் தேர்தலில் மார்க்கம் நகரசபை தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here