காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பிராந்திய அலுவலகம் யாழில் திறக்கப்படுகிறது!

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்திலும் திறக்கப்படவுள்ளது.

இம்மாதம் 24ம் திகதி யாழில் ஆடியபாதம் வீதியில் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பிராந்திய அலுவலகங்கள் ஏற்கனவே மாத்தறை, மன்னாரில் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, மூன்றாவதாக யாழிலும் திறக்கப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் நிறுவப்பட்டு பல மாதங்களாகிய போதும், அது இதுவரையில் உருப்படியாக எதனையும் செய்யவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here